D50 பட தொழில்நுட்பக் குழு இவர்கள் தான்... தனுஷ் உடன் மீண்டும் கை கோர்க்கும் முக்கிய கலைஞர்கள்! முழு பட்டியல் இதோ

தனுஷின் D50 பட தொழில்நுட்ப குழுவின் விவரம் வெளியீடு,Dhanush in d50 movie core technucal crew revealed sun pictures | Galatta

ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தனது 50வது திரைப்படமான D50 படத்தை இயக்கி நடிக்கும் நடிகர் தனுஷ் உடன் அப்படத்தில் கைகோர்க்கும் முக்கிய தொழில்நுட்ப குழுவினரின் பட்டியல் வெளியானது. தனக்கென தனி ரூட்டில் மொழிகளை கடந்து ஆகச்சிறந்த நடிகராக புதிய புதிய உச்சங்களை தொட்டு வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாத்தி திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதனை அடுத்து தனது அடுத்த பிளாக்பஸ்டர் திரைப்படமாக ராக்கி & சாணிக் காயிதம் ஆகிய படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பக்கா அதிரடி பீரியட் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்திருக்கிறார். அடுத்ததாக வாத்தி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முல்லா இயக்கத்தில் புதிய படத்தில் தனுஷ் நடிக்கிறார்.

தொடர்ந்து ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கும் தனது வட சென்னை 2 திரைப்படத்தில் மீண்டும் இயக்குனர் வெற்றிமாறனுடன் தனுஷ் இணைய இருக்கிறார். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தனுஷின் 50வது திரைப்படமான D50 திரைப்படத்தின் முதல் அறிவிப்பு வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தை இயக்கும் இயக்குனர் யார்? என பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது இயக்கத்தில் உருவாகும் 2வது திரைப்படமாக D50 திரைப்படத்தை இயக்கி நடிக்க உள்ளார் என நேற்று ஜூன் 5ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தனது பவர் பாண்டி திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் தனுஷ் இயக்க இருக்கும் இந்த திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது இந்த D50 திரைப்படத்தில் இணையும் முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் தற்போது வெளியானது. ஏற்கனவே தனுஷ் உடன் முக்கிய படங்களில் கைகோர்த்த ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், படத்தொகுப்பாளர் பிரசன்னா.ஜி.கே, கலை இயக்குனர் ஜாக்கி என்கிற ஜாக்சன், பப்ளிசிட்டி டிசைனர் கபிலன் செல்லையா மற்றும் ஆடை வடிவமைப்பாளர் காவியா ஸ்ரீ ராம் ஆகியோர் D50 திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர். 

ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் இதுவரை தனுஷோடு இணைந்து அனேகன், மாரி, மாரி 2, பட்டாஸ், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

 

View this post on Instagram

A post shared by Om Prakash (@omdop)

படத்தொகுப்பாளர் பிரசன்னா.ஜி.கே முன்னதாக மாரி, பவர் பாண்டி, வேலையில்லா பட்டதாரி 2, மாரி 2, மாறன் மற்றும் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் தனுஷோடு பணியாற்றி இருக்கிறார்.

Super kicked to begin working on #D50 with @dhanushkraja sir @sunpictures @omdop @jacki_art @theSreyas @kavya_sriram @kabilanchelliah 🔥🔥 pic.twitter.com/sF3pHXeh0Q

— Prasanna.G.K (@editor_prasanna) July 5, 2023

கலை இயக்குனர் ஜாக்கி ஆடுகளம், சீடன், விசாரணை, வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

Happy to be a part of #D50 and the journey with brother @dhanushkraja and @sunpictures continues😍👍 https://t.co/Rf9kBr5Rkz

— Jackson (@jacki_art) July 5, 2023

கர்ணன், திருச்சிற்றம்பலம். நானே வருவேன், வாத்தி மற்றும் தனுஷின் உண்டர்பார் நிறுவனத்தின் 15 வது தயாரிப்பாக வரும் புது படம் உள்ளிட்ட படங்களுக்கு கபிலன் பப்ளிசிட்டி டிசைனராக பணியாற்றியுள்ளார்.

. #D50 🔥

From @dhanushkraja Sir 👑 pic.twitter.com/3VhhhZnyCD

— Sivam C Kabilan (@kabilanchelliah) July 5, 2023

காவியா ஸ்ரீராம் அவர்கள் தனுஷின் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி, கேப்டன் மில்லர் மற்றும் தேரே இஷ்க் மெயின் என விரைவில் தொடங்க இருக்கும் பாலிவுட் படம் உள்ளிட்ட படங்களுக்கு தனுஷ் அவர்களின் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

And the wait is finally over. 💥#NEXT #costumedesign #d50 https://t.co/fkszKD6mws

— Kavya Sriram (@kavya_sriram) July 5, 2023

தளபதி விஜயின் லியோ படத்தில் நடிப்பதை உறுதி செய்த முன்னணி பிரபலம்... சஞ்சய் தத்தை தொடர்ந்து மற்றொரு பாலிவுட் நட்சத்திரம்!
சினிமா

தளபதி விஜயின் லியோ படத்தில் நடிப்பதை உறுதி செய்த முன்னணி பிரபலம்... சஞ்சய் தத்தை தொடர்ந்து மற்றொரு பாலிவுட் நட்சத்திரம்!

ஜெயம் ரவி - ARரஹ்மான் - வெந்து தணிந்தது காடு தயாரிப்பாளர் கூட்டணியில் புதிய பிரம்மாண்ட படம்! அட்டகாசமான டைட்டில் & இதர விவரங்கள் உள்ளே
சினிமா

ஜெயம் ரவி - ARரஹ்மான் - வெந்து தணிந்தது காடு தயாரிப்பாளர் கூட்டணியில் புதிய பிரம்மாண்ட படம்! அட்டகாசமான டைட்டில் & இதர விவரங்கள் உள்ளே

“மாமன்னன்” மாரி செல்வராஜை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… சோசியல் மீடியாவை அதிரவிட்ட புகைப்படங்கள் இதோ!
சினிமா

“மாமன்னன்” மாரி செல்வராஜை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… சோசியல் மீடியாவை அதிரவிட்ட புகைப்படங்கள் இதோ!