விஜயின் 'லியோ' படம் பார்த்த 'தளபதி 68' இயக்குனர் வெங்கட் பிரபுவின் ரியாக்சன் இதுதான்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

தளபதி விஜயின் லியோ படம் பார்த்த இயக்குனர் வெங்கட் பிரபுவின் விமர்சனம்,Thalapathy 68 director venkat prabhu review of vijay in leo | Galatta

தளபதி விஜயின் 68-வது திரைப்படமாக உருவாகும் தளபதி 68 திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது ரிலீசாகி இருக்கும் தளபதி விஜயின் லியோ படத்தை பார்த்த பிறகு தனது விமர்சனத்தை பதிவிட்டு இருக்கிறார்.மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தனக்கென தனி பாணியில் அட்டகாசமான ஆக்சன் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ஐந்தாவது படத்தில் இரண்டாவது முறையாக தளபதி விஜய் உடன் இணைந்து இருக்கிறார். முன்னதாக தளபதி விஜயின் திரை பயணத்தில் இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் இந்த லியோ திரைப்படம் இன்று அக்டோபர் 19ஆம் தேதி ஆயுதபூஜை வெளியீடாக உலகம் எங்கும் மிகப் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறது.

கில்லி, திருப்பாச்சி, ஆதி மற்றும் குருவி ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் தளபதி விஜய் உடன் இணைந்திருக்கும் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ள லியோ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோ பாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப் படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, அனிருத் இசையமைத்துள்ளார்.

மிரள வைக்கும் CG-ல் கழுதைப்புலி உடனான ஒரு மிரட்டலான சண்டைக் காட்சி, அதிரடியான சண்டை காட்சிகள், ACTION PACKED சேசிங் காட்சிகள் என பக்கா ஆக்சன் ட்ரீட் ஆகவும் விஷுவல் ட்ரீட் ஆகவும் வெளிவந்திருக்கும் இந்த லியோ திரைப்படம் ஆயுத பூஜை விடுமுறையை கொண்டாடும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் உற்சாகமடைந்து இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து தனது 68வது திரைப்படமாக உருவாக்கும் தளபதி 68 திரைப்படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்ட தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது லியோ திரைப்படத்தை பார்த்த இயக்குனர் வெங்கட் பிரபு தனது X பக்கத்தில், #LEO 🔥🔥🔥🔥 எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்திருக்கும் தளபதி விஜயின் லியோ திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற மாதிரி பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், தளபதி 68 திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு கொடுத்திருக்கும் இந்த விமர்சனம் ரசிகர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்திருக்கும் லியோ திரைப்படம் குறித்து தளபதி 68 படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு பதிவிட்ட அந்த விமர்சனம் இதோ...
 

#Leo 🔥🔥🔥🔥 pic.twitter.com/3KSmd1TEAo

— venkat prabhu (@vp_offl) October 19, 2023