தளபதி விஜயின் லியோ பட FDFS-வில் திருமண நிச்சயம் செய்த ஜோடி... திரையரங்குக்குள் மோதிரம் மாற்றி கொண்டாட்டம்! வீடியோ உள்ளே 

தளபதி விஜயின் லியோ பட FDFS-வில் திருமண நிச்சயம் செய்த ஜோடி,Pudhukottai couple get engaged at leo fdfs | Galatta

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்திருக்கும் லியோ திரைப்படத்தின் FDFS-வில் மோதிரம் மாற்றிக் கொண்ட ஜோடி திருமணம் நிச்சயம் செய்தனர். மக்களின் மனம் கவர்ந்த நாயகராக திகழும் தளபதி விஜயின் பக்கா ஆக்சன் ட்ரீட்டாக லியோ திரைப்படம்  இன்று அக்டோபர் 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை இந்திய சினிமாவில் பார்த்திராத அளவிற்கு மிரட்டலான ஒரு ஆக்சன் காட்சியாக CG உதவியுடன் அட்டகாசமான ஒரு கழுதை புலி சண்டை காட்சியும், மிகவும் விறுவிறுப்பான ஒரு சேசிங் காட்சியும் என பல மிரட்டலான ஆக்சன் காட்சிகளோடு பக்கா ஆக்சன் மற்றும் விஷுவல் ட்ரீட்டாக வந்திருக்கும் இந்த லியோ திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தொடர்ந்து தனது பாணியில் அசத்தலான ஆக்சன் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து இயக்குனர்கள் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி திரைக்கதை மற்றும் வசனங்களில் பணியாற்றியுள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள லியோ திரைப்படத்திற்கு பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். மாநகரம் படத்திலிருந்து தொடர்ச்சியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜின் எல்லா படங்களிலும் கலை இயக்குனராக பணியாற்றிய சதீஷ்குமார் அவர்கள் லியோ படத்திலும் கலை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். 

மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் மற்றும் திரிஷாவுடன் இணைந்து சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், அனுராக் காஷ்யப், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர், பாபு ஆண்டனி, மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மரியான், அபிராமி வெங்கடாசலம், ஜாஃபர் சாதிக், மாயா கிருஷ்ணன், சாந்தி மாயாதேவி, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் லியோ திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். தினேஷ் மாஸ்டர் நடன இயக்கத்தில் அன்பறிவு மாஸ்டர்களின் அதிரடி ஆக்ஷனில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஜோடியான தளபதி விஜய் - திரிஷா ஜோடி கில்லி, திருப்பாச்சி, ஆதி மற்றும் குருவி ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பின் இந்த லியோ திரைப்படத்தில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று அக்டோபர் 19ஆம் தேதி புதுக்கோட்டையில் தளபதி விஜயின் லியோ பட FDFS-வில் காலை 9 மணிக்கு படம் ஆரம்பமாவதற்கு முன்பு திரையரங்கில் மோதிரம் மாற்றிக் கொண்ட ஜோடி திருமண நிச்சயம் செய்து கொண்டனர். புதுக்கோட்டையை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் மஞ்சுளா ஜோடி லியோ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியில் மோதிரம் மாற்றிக் கொண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டதால் அந்த திரையரங்கில் கொண்டாட்டம் இன்னும் அதிகரித்தது. இந்த நிச்சயதார்த்த நிகழ்வின் வீடியோ தற்போது வெளிவந்து சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. லியோ பட FDFS-வில் ஜோடி திருமண நிச்சயம் செய்து மோதிரம் மாற்றிக் கொண்ட அந்த வீடியோ இதோ…