‘ஓவர்சீஸ்ல அட்வான்ஸ் புக்கிங் ரொம்ப பெருசா இருக்கு!’- ரஜினிகாந்தின் ஜெயிலர் பட எதிர்பார்ப்புகள் பற்றி பேசிய முன்னணி தயாரிப்பாளர்! வீடியோ உள்ளே

ரஜினிகாந்தின் ஜெயிலர் பட எதிர்பார்ப்புகள் பற்றி பேசிய தயாரிப்பாளர்,Dhananjeyan about rajinikanth in jailer advance booking in overseas | Galatta

ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு திரைப்படம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் திரைப்படம். முதல் முறையாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து இருக்கும் இந்த ஜெயிலர் திரைப்படத்தின் முதல் அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்தே பெரும் எதிர்பார்ப்புகள் வரத் தொடங்கின. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் உள்பட  ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளது. ராக் ஸ்டார் அனிருத் இசையில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் ஏற்கனவே ட்ரெண்டிங் ஹிட்டடித்த நிலையில்  சமீபத்தில் வந்த ஜெயிலர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வீடியோவான ஜெயிலர் ஷோகேஸ் இன்னும் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை கூட்டி இருக்கிறது. 

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்த தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் நம்மோடு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், “அடுத்த உடனடியாக ரிலீசாக இருக்கும் திரைப்படம் ஜெயிலர். எல்லா பக்கமும் ஜெய்லர் படம் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இதனிடையே ஜெயிலர் ஷோகேஸ் என்ற ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள் அது இன்னும் எவ்வளவு தூரம் எதிர்பார்ப்புகளை கூட்டி இருக்கிறது?” எனக் கேட்டபோது, “எதிர்பார்ப்பு ரொம்ப பெரிதாகி இருக்கிறது என்று தான் சொல்லுவேன். இந்த இசை வெளியீட்டு விழாவில் தலைவர் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் பேசியிருக்கிறார் ஒரு கோர்வையாக பேசி இருக்கிறார் எந்த இடைவெளியும் இல்லாமல்… அவருடைய ஒவ்வொரு பேச்சும் மிகப் பெரிய அளவில் ரீச் ஆகி இருக்கிறது. அவர் சொன்ன காகம் பருந்தில் ஆரம்பித்து எக்கச்சக்கமான விஷயங்கள் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. குறிப்பாக ட்ரெய்லர் வந்த பிறகு எதிர்பார்ப்பு இன்னும் பெரிதாகி விட்டது. ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே We are Coming from CBI என்றதும் சுனில், "டொனேஷன் ஏதாவது வேண்டுமா " என்றார் பாருங்கள் அங்கு தான் நெல்சன் நிற்கிறார். அந்த ட்ரெய்லர் பார்த்தவுடன் எனக்கு பயங்கரமாக சிரிப்பு வந்துவிட்டது. அந்த நெல்சன் உடைய டிரேட்மார்க் விஷயத்தை ஆரம்பத்திலேயே பார்த்து விட்டேன். தொடர்ந்து அது அடுத்தடுத்து வருகிறது ஓரிடத்தில் ரம்யா கிருஷ்ணன் “இப்போதாவது நிறுத்திக் கொள்ளலாம் அல்லவா?” என கேட்டபோது, “ரொம்ப தூரம் போயிட்டேன்” என அவர் சொல்வாரே அதை வைத்து இப்போது எத்தனை மீம்கள் வந்து கொண்டிருக்கின்றன தெரியுமா? அந்த நான் ரொம்ப தூரம் போயிட்டேன் என்கிற அந்த மீமை வெவ்வேறு விதமாக நான்கு வித்தியாசமான மீம்களில் பார்த்தேன். அஜித் குமாரை வைத்து ஒரு மீமில் பார்த்தேன் இன்னும் வெவ்வேற விஷயங்களில் பார்த்தேன். அப்படி பார்க்கும் போது இயக்குனர் நெல்சன் செம்மையாக ஸ்கோர் செய்து விட்டார் என தெரிகிறது. இந்த எதிர்பார்ப்பினுடைய பிரதிபலிப்பு தான் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் வெளிநாடுகளில் அட்வான்ஸ் புக்கிங் ரொம்ப பெரிதாக இருக்கிறது.” என தெரிவித்திருக்கிறார் இன்னும் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

அதர்வா - கௌதம் மேனன் - 'குட் நைட்' மணிகண்டன் கூட்டணியின் அதிரடி வெப்சீரிஸ்... கவனம் ஈர்க்கும் மத்தகம் ட்ரெய்லர் இதோ!
சினிமா

அதர்வா - கௌதம் மேனன் - 'குட் நைட்' மணிகண்டன் கூட்டணியின் அதிரடி வெப்சீரிஸ்... கவனம் ஈர்க்கும் மத்தகம் ட்ரெய்லர் இதோ!

'இந்த அன்பு மிகப்பெரிய சர்ப்ரைஸ்!'- வாரணம் ஆயிரம் தெலுங்கு ரீ-ரிலிஸை கொண்டாடிய ரசிகர்கள்... நன்றி தெரிவித்த சூர்யா!
சினிமா

'இந்த அன்பு மிகப்பெரிய சர்ப்ரைஸ்!'- வாரணம் ஆயிரம் தெலுங்கு ரீ-ரிலிஸை கொண்டாடிய ரசிகர்கள்... நன்றி தெரிவித்த சூர்யா!

தளபதி விஜய் மக்கள் இயக்கம் கேரளா நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம்! விவரம் உள்ளே
சினிமா

தளபதி விஜய் மக்கள் இயக்கம் கேரளா நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம்! விவரம் உள்ளே