“இனிமே ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ பட்டம் வேண்டாம்” ரசிகர்கள் முன்னிலையில் ராகவா லாரன்ஸ் பகிர்ந்து கொண்ட தகவல் - Exclusive interview இதோ..

மக்களின் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ராகவா லாரன்ஸ் - Raghava Lawrence about makkal super star title | Galatta

தென்னிந்தியாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும்  நடன கலைஞராகவும் சாதித்து காட்டிய நட்சத்திரம் ராகவா லாரன்ஸ். திரைத்துறையில் பன்முக திறன் கொண்ட இவர் திரைத்துறையில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் பல சமூக செயல்பாடுகளில் களமிறங்கி இதுவரை பல செயல்பாடுகளை செய்து வருகிறார். இவரால் ஆயிரக்கணக்கான ஆதரவற்றோர் பயனடைந்து வருவது அனைவரும் அறிந்ததே.. அதன்படி அவரது ரசிகர்கள் அவரது ஸ்டைல் மற்றும் மக்கள் பணியில் கருத்தில் கொண்டு அவருக்கும், மக்களின் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை வழங்கினர். அதை ஏற்று அவரது முந்தைய படமான ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ என்ற படத்தில் மக்களின் சூப்பர் ஸ்டார் என்ற பட்டதுடன் படம் வெளியானது. அப்போது இது ரஜினி ரசிகர்களிடம் அதிர்வை ஏற்படுத்தி அந்த பட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்தது. இதையடுத்து ராகவா லாரன்ஸ் அந்த பட்டத்தை பயன்படுத்தாமல் இருந்தார்.

இந்த சம்பவம் குறித்து நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு ரசிகர்கள் முன்னிலையில் பேசிய ராகவா லாராசன்ஸ்,

"மக்கள் சூப்பர் ஸ்டார் ன்ற பட்டம் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் போட்டோம். எனக்கு மக்களும் பிடிக்கும் சூப்பர் ஸ்டாரும் பிடிக்கும்.. சின்ன வயசுல இருந்தே அவர் மாதிரி ட்ரெஸ் போட்டுட்டு அவராவே நினைச்சு வாழ்ந்துட்டு இருந்தேன்.  மக்கள் சூப்பர் ஸ்டார் னு பட்டம் போடும் போது, ரஜினி சார் ரசிகர்களே வருத்தப்பட்டாங்க.. சூப்பர் ஸ்டார் இருக்கும் போது நீங்க என்ன மக்கள் சூப்பர் ஸ்டார் னு போட்டுக்கிறீங்க.. னு கேட்டாங்க 

அந்த நேரம் நான் ரொம்ப டென்ஷன் ஆயிட்டன்.‌ எனக்கு தலைவர் பிடிக்கும் மக்களும் பிடிக்கும் மக்கள் சூப்பர் ஸ்டார் போட்டா என்னாச்சு.. ஒரு அப்பா பேர் சேர்க்குறா மாதிரி தான இது என்று நினைச்சேன்.  அது எனக்கே திரும்பிடுச்சு..  அப்பறம் இயக்குனர் சாய் அவரை கூப்டு நீங்க விருப்பப்பட்டு போட்டா மாதிரி சொல்லுங்க.. என்ன தப்பா பேசுறாங்க னு சொன்னேன். அதற்கு சரி னு சொன்னார்.வீட்லையும் அம்மா, உன் தலைவர் பேரை தான போட்ட.. அப்பறம் என்ன னு கேட்டாங்க.. 'இனிமே வேண்டாம்' னு சொல்லிட்டேன். எனக்கு என்ன புரிஞ்சிக்கலன்னா எனக்கு ரொம்ப கோபம் வரும். அதவிட வலிக்கும்.. வேற யாருனா பேசுனா பரவாயில்லை.‌ சூப்பர் ஸ்டார் ரசிகர்களே அது சொல்லும் போது எனக்கு அது நியாயமாப்பட்டு அந்த பட்டத்தை எடுத்துட்டேன்.." என்றார் ராகவா லாரன்ஸ்.

தற்போது ராகவா லாரன்ஸ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் வெற்றிமாறன் எழுதி தயாரிக்கும் படமான ‘அதிகாரம்’ படத்திலும் மற்றும் பி வாசு அவர்கள் இயக்கி வரும் சந்திரமுகி 2 படத்திலும் நடித்து வருகிறார். மேலும் லோகேஷ் கனகராஜ் எழுத்தில் இயக்குனர் ரத்னா இயக்கவிருக்கும் புதிய படத்திலும் நடிக்கவிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

மேலும் இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு அட்டகாசமான பல தகவல்களை பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ...

 

“நயன்தாராவோட Cooking ல எனக்கு இது தான் பிடிக்கும்” சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த விக்னேஷ் சிவன் – Exclusive Interview இதோ..
சினிமா

“நயன்தாராவோட Cooking ல எனக்கு இது தான் பிடிக்கும்” சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த விக்னேஷ் சிவன் – Exclusive Interview இதோ..

“நானும் ரௌடி தான் படத்தில் அந்த காட்சியின் போது இதுதான் நடந்தது..” விக்னேஷ் சிவன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் – முழு வீடியோ இதோ.
சினிமா

“நானும் ரௌடி தான் படத்தில் அந்த காட்சியின் போது இதுதான் நடந்தது..” விக்னேஷ் சிவன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் – முழு வீடியோ இதோ.

“அம்மாவ சந்தோஷப்படுத்த இந்த சினிமாவையே கையில எடுத்தேன்..”  ராகவா லாரன்ஸ் பகிர்ந்து கொண்ட மாஸ் தகவல்.. – முழு வீடியோ இதோ..
சினிமா

“அம்மாவ சந்தோஷப்படுத்த இந்த சினிமாவையே கையில எடுத்தேன்..” ராகவா லாரன்ஸ் பகிர்ந்து கொண்ட மாஸ் தகவல்.. – முழு வீடியோ இதோ..