“திரிஷா நடிக்க முடியாம போனதுக்கு இதுதான் காரணம்” விக்னேஷ் சிவன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் – Exclusive interview இதோ..

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் த்ரிஷா விக்னேஷ் சிவன் விளக்கம் - Vignesh shivan reveals that trisha the first choice to play kathija | Galatta

கடந்த 2022 ம் ஆண்டு லலித் குமார் அவர்களின் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ காதலை மையமாக கொண்டு நகைச்சுவை கலந்து உருவான இப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படம் அறிவிப்பிளிருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது காரணம் தென்னிந்தியாவில் முன்னிலை வகிக்கும் இரண்டு கதாநாயகிகளான நயன்தாரா, சமந்தா இருவரும் ஒரே படத்தில் நடித்திருப்பது படத்தின் ஆர்வத்தை மேலும் கூட்டியது. அதன்படியே படத்தின் பாடல்கள் அனிரூத் இசையில் அட்டகாசமான அமைந்தது. விஜய் சேதுபதியின் அட்டகாசமான நடிப்பில் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. பக்கவான பீல் குட் திரைப்படமாக ரசிகர்கள் இன்றும் அந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் மீடியாவின் சிறப்பு நிகழ்ச்சியான கேம் செஞ்சர்ஸ் வித் சுஹாசினி மணிரத்னம்’ என்ற நிகழ்ச்சியில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இரண்டு கதாநாயகிகள் சேர்ந்து உருவான கதைக்களம் குறித்து பேசிய அவர்,

"இந்த படத்தில் முதல்ல திரிஷா மேம் அவர்களும் நயன்தாரா அவர்களும் பன்றா மாதிரி இருந்துச்சு, அப்போ திரிஷா மேம் பண்ணாததால தான் அந்த படம் அந்த நேரத்தில் பண்ண முடியாம போச்சு.. அந்த படம் பண்ண முடியாததால தான் நான் தானா சேர்ந்த கூட்டம் படம் பண்ணேன்.  அந்த நேரத்துல காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ஏஎம் ரத்னம் சார் தயாரிக்குறதா இருந்தது.  அந்த நேரத்தில் அது சரியா நடக்க முடியல..எனக்கு அந்த நேரத்தில் சரியான நிலையில் ஒரே படிநிலையில் இருக்கும் கதாநாயகிகள் தேவைப்பட்டாங்க..  அதுக்கப்புறம் தான் நான் சமந்தா அவர்களிடம் கதை சொன்னேன். ஆரம்பத்தில் அவர்களுக்கும் படம் குறித்து சில தயக்கம் இருந்தது. பின் நான் கதை சொன்னேன்.. அவங்க நிறைய காட்சிகளில் சிரித்தார்கள் அவங்களுக்கு கதை பிடிச்சது. பின்புதான் அந்த படம் நடந்தது" என்றார் விக்னேஷ் சிவன். மேலும் தொடர்ந்து அவர்

“படம் வந்த பின் யாரும் குற்றம் சொல்ல முடியாது நயன்தாரா விற்கு தான் அதிகமான காட்சி, சமந்தாவிற்கு குறைவான காட்சி என்று.. நான் என் வேலையை நம்பினேன். அதைதான் செய்தேன். அந்த படத்தின் போதே அவர்களிடம் சொன்னேன், "நான் ஒரு சார்பான இயக்குனர் அல்ல.. நான் தொழிலில் நேர்மையாக இருப்பவன் அதை நான் சொல்லி புரிய வைக்க முடியாது‌. ஆனால் என்னை நம்புங்கள். படம் வந்த பின் உங்களுக்கு தெரிய வரும்" என்றேன். சமந்தாவும் படம் பார்த்து பின் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தார்கள். நயன் ம் அவர்களும் நல்ல நட்பாய் இருந்தாங்க. படம் முழுக்க நல்லாவே போச்சு.." என்றார்.

மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரது திரைப்பயணம் குறித்தும் நயன்தாரா மற்றும் அவரது மகன்கள் குறித்தும் பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..

10 மொழிகளில் வெளியாகவிருக்கும் ‘சூர்யா 42’ படத்தின் ஆடியோ ரைட்ஸை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம் – படக்குழு வெளியிட்ட அட்டகாசமான Glimpse இதோ..
சினிமா

10 மொழிகளில் வெளியாகவிருக்கும் ‘சூர்யா 42’ படத்தின் ஆடியோ ரைட்ஸை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம் – படக்குழு வெளியிட்ட அட்டகாசமான Glimpse இதோ..

“நயன்தாராவோட Cooking ல எனக்கு இது தான் பிடிக்கும்” சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த விக்னேஷ் சிவன் – Exclusive Interview இதோ..
சினிமா

“நயன்தாராவோட Cooking ல எனக்கு இது தான் பிடிக்கும்” சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த விக்னேஷ் சிவன் – Exclusive Interview இதோ..

“நானும் ரௌடி தான் படத்தில் அந்த காட்சியின் போது இதுதான் நடந்தது..” விக்னேஷ் சிவன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் – முழு வீடியோ இதோ.
சினிமா

“நானும் ரௌடி தான் படத்தில் அந்த காட்சியின் போது இதுதான் நடந்தது..” விக்னேஷ் சிவன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் – முழு வீடியோ இதோ.