சந்திரமுகி 2 ம் பாகம் வெளியாவதற்கு முன்பே மூன்றாம் பாகம்?.. - அட்டகாசமான அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்.. Exclusive interview இதோ..

சந்திரமுகி  2 படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த ராகவா லாரன்ஸ் முழு வீடியோ இதோ  - Raghava Lawrence about chandramukhi movie | Galatta

கடந்த 2005 ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அட்டகாசமான கதைகளத்தில் இதுவரை தமிழ் ரசிகர்கள் பாத்திரடாத திரைக்கதையில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் ‘சந்திரமுகி’.  சிவாஜி புரொடக்ஷன் தயாரிப்பில் உருவான இப்படத்தில் ரஜினிகாந்த் அவருடன் இணைந்து ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, பிரபு, சோனு சூட், மாளவிகா, வினித், நாசர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வெளியான இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று 800 க்கும் மேற்பட்ட நாட்கள் திரையரங்குகளில் ஓடி மிகப்பெரிய சாதனையை படைத்தது. காலம் கடந்தாலும் இன்றும் அப்படத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருவது குறிப்பிடதக்கது.  

தற்போது 18 வருடங்களுக்கு பின் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்குனர் பி வாசு அவர்கள் இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் நடிக்க படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கின்றார். மேலும் படத்தில் லக்ஷ்மி மேனன், ஸ்ருஷ்டி, மகிமா நம்பியார், ராதிகா ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க முதல் பாகத்தில் காமெடியில் கலக்கிய வைகை புயல் வடிவேலு இந்த படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் ஆர் ஆர் ஆர் படத்தின் இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி அவர்கள் இசையமைத்து வருகிறார்.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் சந்திரமுகி பாகம் 2 படம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு துவக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் ஏற்பாடு செய்த சிறப்பு பேட்டியில் நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் கலந்து கொண்டு சந்திரமுகி பாகம் 2 படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டார், அதில் பேசிய அவர்,

"பி. வாசு சார் சந்திரமுகி 2 எடுக்க போறதா ஒரு விளம்பரம் போட்டிருந்தார். நான் அந்த நேரம் அவருடன் சிவலிங்கா அவருடன் பண்ணி முடிச்சேன். அதனால் அவரை அழைத்து வாழ்த்து தெரிவித்தேன். அப்போ அவரிடம் கேட்டேன்.. யார் ஹீரோ னு.. அவர் வெளியே முயற்சி செய்றேன் என்றார்.‌ நான் கதை முழுசா ரெடினா நான் கேட்கலாமா னு கேட்டேன். அவர் உடனே கதை சொல்ல வந்தார்.  வாசு சார் ரொம்ப நல்லா பண்ணிட்டு இருக்கார். “ என்றார்.

சந்திரமுகி முதல் பாகத்தில் ரசிகர்களை மிரள வைத்த மிகப்பெரிய பாம்பு குறித்து பேசிய அவர், “இந்த படத்திலும் அந்த பாம்பு இருக்கு.. அதற்கான காட்சிகளும் உள்ளது. அந்த பாம்பு நானும் பி வாசு அவரிடம்  கேட்டேன்.. பாம்புக்கும் இந்த படத்திற்கும் என்ன சம்மந்தமும் னு அவர் சந்திரமுகி 3 ல சொல்றேன் னு சொல்லிருக்கார்.."  என்றார் ராகவா லாரன்ஸ்.

இதனடிப்படியில் விரைவில் சந்திரமுகி 2 முடிந்த பின் சந்திரமுகி படத்தின் 3 பாகம் நிறைவடையும் என்று தெரிய வருகிறது. முன்னதாக பல பேட்டிகளில் இயக்குனர் வாசு மூன்றாம் பாகம் குறித்து பல தகவல்களை கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு அட்டகாசமான பல தகவல்களை பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ...

“நானும் ரௌடி தான் படத்தில் அந்த காட்சியின் போது இதுதான் நடந்தது..” விக்னேஷ் சிவன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் – முழு வீடியோ இதோ.
சினிமா

“நானும் ரௌடி தான் படத்தில் அந்த காட்சியின் போது இதுதான் நடந்தது..” விக்னேஷ் சிவன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் – முழு வீடியோ இதோ.

“அம்மாவ சந்தோஷப்படுத்த இந்த சினிமாவையே கையில எடுத்தேன்..”  ராகவா லாரன்ஸ் பகிர்ந்து கொண்ட மாஸ் தகவல்.. – முழு வீடியோ இதோ..
சினிமா

“அம்மாவ சந்தோஷப்படுத்த இந்த சினிமாவையே கையில எடுத்தேன்..” ராகவா லாரன்ஸ் பகிர்ந்து கொண்ட மாஸ் தகவல்.. – முழு வீடியோ இதோ..

ஏன் திடீர் ரயில் பயணம்?..பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கும் விக்னேஷ் சிவன்.. முழு வீடியோ இதோ..
சினிமா

ஏன் திடீர் ரயில் பயணம்?..பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கும் விக்னேஷ் சிவன்.. முழு வீடியோ இதோ..