தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய் டிவி.ரசிகர்களின் ரசனை அறிந்து பல புதுமையான நிகழ்ச்சிகளை விஜய் டிவி ஒளிபரப்புவார்கள்.பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர்ஹிட் அடித்து விடும்.இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பலரும் ரசிகர்கள் மத்தியில் நட்சத்திர அந்தஸ்தை பெற்று உயர்ந்துள்ளனர்.

விஜய் டிவியின் செம ஹிட் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் சிவாங்கி.தனது வித்தியாசமான குரலால் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறினார் சிவாங்கி.அடுத்ததாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார் சிவாங்கி.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் மிகவும் பிரபலமானவராக செல்லப்பிள்ளையாக உருவெடுத்தார் சிவாங்கி.இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை அடுத்து சிவகார்த்திகேயனின் டான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் சிவாங்கி.இவர் பாடிய அஸ்கு மாறோ பாடல் சமீபத்தில் வெளியாகி செம ட்ரெண்ட் அடித்தது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அஸ்வின் மற்றும் ஷிவாங்கி ஜோடி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.அஸ்வின் தன் பங்கிற்கு சில படங்களில் நடித்து வருகிறார்.தற்போது இருவரும் திருமணம் செய்துகொண்டதாக ஒரு தவறான புகைப்படத்தை சிலர் பரப்பி வருகின்றனர்,அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் அது தவறாக சித்தரிக்கப்பட்ட புகைப்படம் அதனை யாரும் நம்பவேண்டாம் என்று அஸ்வின் மற்றும் சிவாங்கி இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளனர்.

cook with comali ashwin sivaangi statement on morphed photos controversy