விஜய் டிவியின் வித்தியாசமான முயற்சியாக ஒளிபரப்பாகி ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சியாக மாறியது குக் வித் கோமாளி.சமையல் நிகழ்ச்சியில் காமெடியன்களை சேர்த்து கலக்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் நிறைவடைந்து மூன்றாவது ஒளிபரப்பாகி வருகிறது.10 போட்டியாளர்கள் மற்றும் 10 கோமாளிகளுடன் இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பை தொடங்கியுள்ளது.நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தாமு தொடர்கின்றனர்.கோமாளிகளாக மணிமேகலை,சிவாங்கி,சுனிதா மற்றும் பாலா உள்ளிட்டோர் உள்ளனர்.

இவர்களை தவிர சக்தி,குரேஷி,சூப்பர் சிங்கர் பரத் மற்றும் மூக்குத்தி முருகன் உள்ளிட்டோர் புதிய கோமாளிகளாக இணைத்துள்ளனர்.இந்த நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்கள் ஆகியுள்ளது.இந்த நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.வரும் வாரத்திற்கான ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

எப்போதும் செம ஜாலியாக இருக்கும் ப்ரோமோக்கள் போல் இல்லாமல் இந்த முறை ஒரு எமோஷனலான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளனர்.என்ன காரணம் என்று பார்த்தால் நடுவர்களின் ஒருவரான செஃப் தாமு இந்த தொடரை விட்டு செல்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளது,இது உண்மையா அல்லது ஏப்ரல் முதல் வாரம் நிகழ்ச்சி ஒளிபரப்பாவதால் ரசிகர்களை ஏப்ரல் fool prank செய்ய திட்டமிட்டுள்ளார்களா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்