தமிழ் திரை உலகின் முன்னணி கமர்சியல் இயக்குனராக பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து என்றென்றும் ரசிகர்களை மகிழ்வித்து வரும் இயக்குனர் சுந்தர்.சி இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் சுந்தர்.சி நடிப்பில் தலைநகரம் 2 வல்லான் மற்றும் ஒன் 2 ஒன் ஆகிய திரைப்படங்கள் வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன.

இயக்குனராக சுந்தர்.சி கடைசியாக இயக்கி நடித்து வெளிவந்த அரண்மனை 3 திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. இந்த வரிசையில் முன்னதாக சூப்பர் ஹிட்டான கலகலப்பு-2 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா மற்றும் ஜெய் இணைந்து நடித்துள்ள திரைப்படமாக தயாராகியுள்ளது காஃபி வித் காதல் திரைப்படம்.

ஜீவா , ஜெய் உடன் இணைந்து DD-திவ்யதர்ஷினி, ஸ்ரீகாந்த், அமிர்தா, மாளவிகா ஷர்மா, ரைசா வில்சன், சம்யுக்தா சண்முகநாதன், ஐஸ்வர்யா தத்தா, ரெட்டின் கிங்ஸ்லி, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக காஃபி வித் காதல் திரைப்படம் தயாராகி வருகிறது.

குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள காஃபி வித் காதல் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசைய்மைத்துள்ளார். முன்னதாக காஃபி வித் காதல் திரைப்படத்தில் இருந்து வெளிவந்த ரம்பம்பம், தியாகி பாய்ஸ் ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த பாடலாக நாளைய பொழுது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த பாடல் இதோ…