தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகனாக நடிகர் சியான் விக்ரம் அவர்களின் மகன் துருவ் விக்ரம், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ரீமேக்காக தமிழில் உருவாக்கப்பட்ட ஆதித்ய வர்மா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

இதனைத்தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது தந்தை சீயான் விக்ரமுடன் இணைந்து துருவ் விக்ரம் நடித்த திரைப்படம் மகான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீசான மகான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

மகான் படத்தில் சீயான் விக்ரமுடன் போட்டி போட்டு நடித்த துருவ் விக்ரமின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும் கவனம் செலுத்திவரும் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா திரைப்படத்திலும் மகான் திரைப்படத்திலும் பாடல்களைப் பாடியுள்ளார். மேலும் சில தினங்களுக்கு முன்பு சுயாதீன இசைக்கலைஞராக பாடல்களை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

அந்தவகையில் சுயாதீன இசை கலைஞராக தனது முதல் மியூசிக் வீடியோ குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளதாக தெரிவித்துள்ளார் துருவ் விக்ரம். இதனை அறிவிக்கும் வகையில் தற்போது புதிய போஸ்டரையும் மியூசிக் வீடியோ தயாராகும் ப்ரோமோ வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டர் மற்றும் வீடியோ இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Dhruv (@dhruv.vikram)