பொன்னியின் செல்வன் பட வெளிநாட்டு ரிலீஸ் உரிமை குறித்து வெளியான தகவல்!
By Anand S | Galatta | August 24, 2022 17:03 PM IST

இந்திய திரை உலகின் ஆகச் சிறந்த இயக்குனராக திகழும் இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரம்மாண்ட படைப்பாக தயாராகியுள்ளது பொன்னியின் செல்வன் திரைப்படம். இரண்டு பாகங்களாக வெளிவரவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.
பொன்னியின் செல்வனின் முன்னணி கதாபாத்திரங்களாக ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன் என்கிற பொன்னியின் செல்வன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி, குந்தவை, சுந்தர சோழர், ஆழ்வார்க்கடியான் நம்பி, பெரிய பழுவேட்டரையர், சிறிய பழுவேட்டரையர், பூங்குழலி, மதுராந்தகன், பார்த்திபேந்திர பல்லவன், கொடும்பாளூர் வேளாளர் பூதி விக்ரம கேசரி கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ரஹ்மான், விக்ரம் பிரபு, பிரபு ஆகியோர் நடித்துள்ளனர்.
ரவிவர்மன் ஒளிப்பதிவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் பல மொழிகளில் ரிலீஸாகவுள்ளது.
முன்னதாக வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தின் டீஸர் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ட்ரைலர் செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை டென்ட்கொட்டா நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Delighted to announce that #PS1 🗡️ will be distributed OVERSEAS by #LycaProductions in association with @tentkotta 🤝🏻✨#PonniyinSelvan 🗡️ #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions #TentKotta @Tipsofficial @PrimeVideoIN pic.twitter.com/z0pqfeKEeX
— Lyca Productions (@LycaProductions) August 24, 2022