கோலாகலமாக நடந்த ஒளிப்பதிவாளர் ரவி.K.சந்திரன் இல்லத் திருமணம்... நேரில் வாழ்த்திய நட்சத்திரங்களின் புகைப்படங்கள் இதோ!

கோலாகலமாக நடந்த ஒளிப்பதிவாளர் ரவி.K.சந்திரன் இல்லத் திருமணம்,cinematographer ravi k chandran son grand wedding at chennai | Galatta

இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக திகழும் ரவி கே சந்திரன் அவர்களின் மகனின் திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. ஆரம்பத்தில் மலையாளத்தில் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ரவி கே சந்திரன் அவர்கள் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளிவந்த விஜயகாந்தின் ஹானஸ்ட் ராஜ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து மின்சார கனவு படத்தில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ரவி கே சந்திரன் அவர்கள்  இயக்குனர் ராஜீவ் மேனனின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் இயக்குனர் மணிரத்தினத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் ,  ஆயுத எழுத்து மற்றும் ஓகே ஜானு (ஹிந்தி) அஜித் குமாரின் சிட்டிசன் இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸின் கஜினி (ஹிந்தி) ஏழாம் அறிவு உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

அது மட்டுமின்றி நேரடி ஹிந்தி திரைப்படங்களாக வெளிவந்த கபினா கபி யுவா ஃபனா ரப்னே பனா தி ஜோடி மை நேம் இஸ் கான் அக்னி பாத் உள்ளிட்ட படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். கடைசியாக தமிழில் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமான ஆதித்ய வர்மா திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ரவி கே சந்திரன் அவர்கள் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஐயப்பனும் ஓசியும் படத்தின் தெலுங்கு ரீமேக்காக வெளிவந்த பீம்லா நாயக் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். மேலும் இயக்குனராக ஜீவா கதாநாயகனாக நடித்த யான் மற்றும் அந்த தூண் படத்தின் மலையாள ரீமேக்கான பிரம்மம் ஆகிய படங்களை ரவி கே சந்திரன் அவர்கள் இயக்கியிருக்கிறார். அடுத்ததாக தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் பிரம்மாண்டமான திரைப்படமாக தயாராகும் OG திரைப்படத்திற்கு ரவி கே சந்திரன் தற்போது ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் அலிப்பதிவாளர் ரவி கே சந்திரன் அவர்களின் மகன் சந்தான கிருஷ்ணனின் திருமண இன்று ஜூன் 29ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.

ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் மற்றும் ஹேமலதா தம்பதியரின் மகன் சந்தான கிருஷ்ணன் மற்றும் பிரவத் குமார் மிஷ்ரா-மாதுரி மிஷ்ரா தம்பதியரின் மகள் மனினி மிஷ்ராவின் திருமணம் சென்னை கிண்டியில் உள்ள பார்க் ஹையாட் நட்சத்திர விடுதியில் இன்று காலை 8.15 மணிக்கு இனிதே நடைபெற்றது. மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ நடைபெற்ற இந்த திருமணத்தில் திரையுலகப் பிரமுகர்கள் அதிகளவில் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர். மணிரத்னம்-சுஹாசினி, ராஜீவ் மேனன், ரவிவர்மன், சிவகுமார், கார்த்தி, ஜீவா, ஆர் டி ராஜசேகர், ஸ்ரீகர் பிரசாத், சுதா கொங்கரா, இயக்குநர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் மணிகண்டன், சாபு சிரில், ஏ ஆர் முருகதாஸ், மேனகா சுரேஷ், தயாரிப்பாளர் தாணு, காளிதாஸ் ஜெயராம் மற்றும் குடும்பத்தினர், சத்யஜோதி தியாகராஜன், சுரேஷ் பாலாஜி, பிரியதர்ஷன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட திரையுலக முன்னணியினர் திருமணத்தில் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். கலாட்டா குழுமமும் மணமக்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. வைரலாகும் அந்த திருமண புகைப்படங்கள் இதோ…
vaazhai movie hero named after mari selvaraj brother sivananaintha perumal vaazhai movie hero named after mari selvaraj brother sivananaintha perumal vaazhai movie hero named after mari selvaraj brother sivananaintha perumal vaazhai movie hero named after mari selvaraj brother sivananaintha perumal

இசையமைப்பாளராக மிஷ்கினின் முதல் படம்... மனதை வருடும் மெலடியில் வந்த ரொமான்டிக்கான முதல் பாடல் இதோ!
சினிமா

இசையமைப்பாளராக மிஷ்கினின் முதல் படம்... மனதை வருடும் மெலடியில் வந்த ரொமான்டிக்கான முதல் பாடல் இதோ!

பிரம்மிக்க வைக்கும் சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் தங்கலான்... பரபரக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டின் அதிரடி GLIMPSE இதோ!
சினிமா

பிரம்மிக்க வைக்கும் சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் தங்கலான்... பரபரக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டின் அதிரடி GLIMPSE இதோ!

மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படம் உருவான விதம்... ரிலீசுக்கு முன் படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ் வீடியோ இதோ!
சினிமா

மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படம் உருவான விதம்... ரிலீசுக்கு முன் படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ் வீடியோ இதோ!