சீயான் விக்ரம் - கௌதம் வாசுதேவ் மேனனின் ACTION PACKED துருவ நட்சத்திரம் பட செம்ம ஸ்டைலான ட்ரெய்லர் இதோ!

சீயான் விக்ரம் - கௌதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம் பட ட்ரெய்லர்,chiyaan vikram in dhruva natchathiram movie new trailer out now | Galatta

ரிலீசுக்கு ரெடியாகி வரும் இயக்குனர் கௌதம் மேனன் - சீயான் விக்ரம் கூட்டணியின் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் அதிரடியான ட்ரெய்லர் தற்போது வெளியானது.  இந்திய சினிமாவின் ஆகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக தொடர்ந்து படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகர்களில் ஒருவராக இடம் பிடித்தவர் நடிகர் சீயான் விக்ரம். அந்த வகையில் கடைசியாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் எனும் கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். தொடர்ந்து சீயான் விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்து அதிரடியான திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன. 

அந்த வரிசையில் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் முதல் முறையாக சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் தொடர்ந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. உலக தரத்தில் தயாராகி இருக்கும் தங்கலான் திரைப்படத்தின் மிரட்டலான டீசர் வெகு விரைவில் வெளிவர தயாராகி இருக்கிறது. முன்னதாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் - சீயான் விக்ரம் கூட்டணியில் அதிரடி ஆக்சன் படமாக உருவாகி நீண்ட காலமாக ரிலீசுக்கு காத்திருக்கும் திரைப்படம் தான் துருவ நட்சத்திரம். தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியில் பக்கா ஸ்டைலான படங்களை கொடுத்து வரும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் முதல் முறை சீயான் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். 

மேலும் இயக்குனர் பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி-DD , விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா, சதீஷ் கிருஷ்ணன், முன்னா சைமன், மாயா கிருஷ்ணன், அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளில் வெவ்வேறு கட்டங்களாக பலமுறை படப்பிடிப்புகள் நடைபெற்று கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது. வென்று தணிந்தது காடு திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகு துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸாக இருப்பதாகவும் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அறிவித்திருந்தார். சமீபத்தில் சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றிருக்கும் பக்கா ஆக்சன் பிளாக் திரைப்படமாக வருகிற நவம்பர் 24ஆம் தேதி சீயான் விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரிலீசுக்கு இன்னும் சரியாக ஒரு மாதம் இருக்கும் சமயத்தில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் அதிரடியான ட்ரெய்லர் தற்போது வெளியானது. சீயான் விக்ரம் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் ஸ்டைலான ஆக்சன் படமாக தயாராகி இருக்கும் இந்த துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் மிகப்பெரிய கவனத்தை ஏற்படுத்தி இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் அதிரடியான ட்ரெய்லர் இதோ…