தளபதி 68ல் விஜய் உடன் கைகோர்க்கும் நட்சத்திரங்கள் & தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியல் வெளியீடு... அசத்தலான படப்பூஜை வீடியோ இதோ!

விஜய் வெங்கட் பிரபுவின் தளபதி 68 பட பூஜை வீடியோ வெளியீடு,vijay venkat prabhu in thalapathy68 movie cast and crew revealed | Galatta

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் கதையின் நாயகனாக நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தின் பட பூஜை வீடியோ வெளியானது. தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்ட தளபதி விஜய் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்திருக்கும் லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது இன்றைய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் பக்கா ஆக்சன் திரைப்படமாக வந்திருக்கும் இந்த லியோ திரைப்படம் மிரள வைக்கும் காட்சிகளோடு பக்கா விஷுவல் ட்ரீட்டாக இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே முதல்முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு உடன் தனது 68வது திரைப்படமாக உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் தளபதி விஜய் இணைந்திருக்கிறார். கடந்த அக்டோபர் 2ம் தேதி பூஜை உடன் தளபதி 68 திரைப்படம் தொடங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே தளபதி 68 திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் கடந்த செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டன. உலகின் முன்னணி VFX நிறுவனங்களில் ஒன்றாக ஆஸ்கார் விருதுகளை வென்ற USC ICT நிறுவனத்துடன் படக்குழு கைகோர்த்துள்ள தளபதி 68, லைட் ஸ்டேஜ் என்ற முறையில் மேம்பட்ட மோஷன் கேப்சர் செய்யக்கூடிய உயர்தர VFX மேற்கொண்டு இருப்பதாக தெரிகிறது. எனவே தளபதி விஜயின் திரை பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மற்றொரு புதிய ட்ரீட் தளபதி 68 படத்திலும் காத்திருப்பதாக ரசிகர்கள் உற்சாகமடைந்து இருக்கின்றனர். 

தளபதி 68 குறித்த இதர அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் லியோ திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டது. அதே போல் தற்போது ரசிகர்களை உற்சாகம் அடைய வைக்கும் வகையில் தளபதி 68 பட குழுவினர் அதிரடியான அறிவிப்பையும் படபூஜை வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். வெளியிட்டுள்ளனர். அசத்தலான இந்த பட பூஜை வீடியோவில் தளபதி 68 படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த பட்டியலை பட குழு வெளியிட்டு இருக்கிறது. அதன்படி தளபதி 68 திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக இணைந்து இருக்கிறார். மேலும் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, ஜெயராம், மோகன், யோகி பாபு, அஜ்மல், விடிவி கணேஷ், வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோர் உடன் பிரேம்ஜி அமரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

வெந்து தணிந்தது காடு, கேப்டன் மில்லர் படங்களின் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுணி தளபதி 68 திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய வெங்கட்ராஜன் படத்தொகுப்பு செய்கிறார். ராஜீவன் அவர்களின் கலை இயக்கத்தில் அதிரடி ஆக்சன் படமாக உருவாகும் இந்த தளபதி 68 திரைப்படத்திற்கு திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றுகிறார். புதிய கீதை திரைப்படத்திற்கு பிறகு நீண்ட காலமாக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த யுவன் சங்கர் ராஜா தளபதி 68 திரைப்படத்தின் மூலம் மீண்டும் தளபதி விஜயின் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் இதர அப்டேட்டுகள் அடுத்தடுத்து விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளிவந்திருக்கும் தளபதி 68 படத்தின் பட பூஜை வீடியோ இதோ…
 

On this auspicious day #Thalapathy68 @actorvijay Sir's #PadaPoojai video is here#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh@vp_offl @thisisysr @actorprashanth @PDdancing #Mohan #Jayaram @actress_Sneha #Laila @meenakshiioffl @iYogiBabu #AGS25 pic.twitter.com/85ROtXein1

— AGS Entertainment (@Ags_production) October 24, 2023