தமிழ் சினிமா ரசிகர்களை தனது நடிப்பால் கவர்ந்து இழுத்து முன்னணி நடிகராக வளர்ந்து நிற்பவர் சீயான் விக்ரம்.இவர் நடித்துள்ள கோப்ரா,பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன.இவர் அடுத்து நடிக்கும் சீயான் 61 படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.தமிழ் சினிமாவின் ஹிட் இயக்குனர்களில் ஒருவரான பா ரஞ்சித் இயக்குகிறார்.ஜீ வி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் கதை கே ஜி எப் தங்க சுரங்கத்தை மையப்படுத்தி உருவாகவுள்ளது என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளதாக சில தகவல்கள் பரவி வருகின்றன.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

தற்போது இந்த படத்தின் மிக முக்கிய அப்டேட் ஒன்று வெகு விரைவில் வெளியாகும் என்று படத்தின் இசையமைப்பாளர் ஜீ வி பிரகாஷ் குமார் ட்வீட் செய்துள்ளார்.அத்துடன் இந்த படத்தின் மியூசிக் வித்தியாசமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இவரது ட்வீட்டை அடுத்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.