கதைதேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.இவர் நடித்துள்ள சர்தார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இரும்புத்திரை,ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.ஜீ.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.ரஜிஷா விஜயன்,ராஷி கண்ணா,லைலா ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளனர்.இரட்டை வேடங்களில் கார்த்தி நடித்து அசத்தியுள்ள இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமும் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.இந்த படத்தின் மேரே ஜான் என்ற பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்