தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகின்றன. அந்த வகையில் அஜித்தின் வேதாளம் படத்தின் ரீமேக்காக சிரஞ்சீவி நடித்துள்ள போலா ஷங்கர் திரைப்படம் அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் 14-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. 

தொடர்ந்து புஷ்பா திரைப்படத்தின் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் ஒரு படத்திலும், நடிகை ராதிகாவின் ராடான் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்திலும் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதனிடையே பிரபல இளம் தெலுங்கு இயக்குனர்களான பாபி மற்றும் வெங்கி குடுமலா ஆகியோரின் படங்களிலும் நடிக்கவுள்ளார் சிரஞ்சீவி.

இந்த வரிசையில் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ள திரைப்படம் காட்ஃபாதர். மலையாளத்தில் மோகன்லால் நடித்து மெகா ஹிட்டான லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக்காக சிரஞ்சீவியுடன் நயன்தாரா, சத்யதேவ் காஞ்சர்னா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள காட்ஃபாதர் திரைப்படத்தில் கௌரவ கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடித்துள்ளார்.

கோனிடெல்லா புரோடக்சன் கம்பனி மற்றும் சூப்பர்குட் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள காட்ஃபாதர் திரைப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவில், S.தமன் இசையமைத்துள்ளார். முன்னதாக காட்ஃபாதர் படத்தில் இருந்து வெளிவந்த தார் மார் பாடல் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த பாடலாக நஜபஜ எனும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. மாஸானா அந்த பாடல் இதோ…