நாட்டையே உலுக்கிய ஓடிசா ரயில் விபத்து.. 280 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..! - இரங்கல் தெரிவித்து வரும் திரையுலகினர்.. விவரம் உள்ளே..

ஒடிசா ரயில் விபத்து திரையுலகினர் இரங்கல் விவரம் உள்ளே - Celebrities condoled for Odisha train accident | Galatta

நேற்று இரவு கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஓடிஸா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே மற்றொரு சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. பின் தொடர்ந்து இரண்டு ரயில்களும் விபத்துக்குள்ளான நிலையில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயிலும் அங்கு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கியவரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சம்பாவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த நிகழ்வு குறித்து தமிழ் நாடு அரசின் சார்பில் இந்த நாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் பாதிப்பு அறிந்து மீட்பு பணிகளை ஒருங்கிணைக்கும் வேலையில் தற்போது உள்ளதாகவும் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பங்களுக்கு 5 இலச்சம் ரூபாய் மற்றும் தீவிர காயமுற்றோருக்கு 1 இலட்சமும் தமிழ் நாடு சார்பில் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவத்து பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜிவி பிரகாஷ் குமார்

“ஓடிசா ரயில் விபத்தை அறிந்து மனமுடைந்து போனேன். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் பிராத்தனைகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Disheartened to hear about the #TrainAccident in Odisha. My heartfelt condolences and prayers to the families who have lost their loved ones

— G.V.Prakash Kumar (@gvprakash) June 3, 2023

கமல் ஹாசன்  

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை அதிகரிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென விழைகிறேன். உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ரயில் விபத்து, இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள், விபத்தின் தாக்கத்தில் இருந்து மீள தேச மக்கள் அனைவரும் துணை நிற்போம்.என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச்…

— Kamal Haasan (@ikamalhaasan) June 3, 2023

அல்லு அர்ஜுன்  

“ஓடிசா ரயில் விபத்து குறித்து அறிந்து அதிர்ந்து போனேன்.. இதயம் நொறுங்கி போனது.. உறவினரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். மேலும் விபத்தில் காயம் ஏற்பட்டவர் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார் அல்லு அர்ஜுன். 

Shocked & heart broken by the tragic train accident in Odisha. My condolences to the families who have suffered the loss of their loved ones. Sending heartfelt prayers for the recovery of those who were injured.

— Allu Arjun (@alluarjun) June 3, 2023

ராகவா லாரன்ஸ்

ஒடிசா ரயில் விபத்து அறிந்து மனமுடைந்து போனேன். குடும்பத்தை இழந்து எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயம்பட்டவர் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்

Heartbreaking to see the tragic train accident in Odisha. My deepest condolences to the affected families. My prayers for injured people to recover soon 🙏🏼🙏🏼#OdishaTrainTragedy pic.twitter.com/o6g6c711cu

— Raghava Lawrence (@offl_Lawrence) June 3, 2023

சூரி

நெஞ்சு பதைபதைக்கிறது... என்ன கொடுமை இது‌ !! இறந்தவர்களின் குடும்பத்தினர் க்கு ஆழ்ந்த இரங்கல்கள்.காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.

நெஞ்சு பதைபதைக்கிறது... என்ன கொடுமை இது‌ !! இறந்தவர்களின் குடும்பத்தினர் க்கு ஆழ்ந்த இரங்கல்கள்.காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். #OdishaTrainTragedy#TrainAccident pic.twitter.com/GQsPrsGSCT

— Actor Soori (@sooriofficial) June 3, 2023

ராஷ்மிகா மந்தனா

Hearbreaking to hear about the news of the train accident in Odisha..
My deepest condolences to the families of the departed.
My prayers for the people who are injured…

— Rashmika Mandanna (@iamRashmika) June 3, 2023

ஜூனியர் என்டிஆர்

Heartfelt condolences to the families and their loved ones affected by the tragic train accident. My thoughts are with each and every person affected by this devastating incident. May strength and support surround them during this difficult time.

— Jr NTR (@tarak9999) June 3, 2023

சிரஞ்சீவி

Utterly shocked at the tragic Coromandel express accident in Orissa and the huge loss of lives! My heart goes out to the bereaved families.
I understand there is an urgent demand for blood units to save lives. Appeal to all our fans and good samaritans in the nearby areas to…

— Chiranjeevi Konidela (@KChiruTweets) June 3, 2023

யாஷ் 

It’s difficult to describe in words how heart-wrenching the train tragedy of Odisha is. My deepest condolences to the families of the deceased and praying for the speedy recovery of those injured. Gratitude to the people who have come out in large numbers to help with rescue…

— Yash (@TheNameIsYash) June 3, 2023

“அவர் நம் இதயங்களை வருடுகிறார்” இளையராஜாவிற்கு புகழாரம் சூட்டிய முதல்வர் மு.க ஸ்டாலின்..! - வைரல் பதிவு இதோ.
சினிமா

“அவர் நம் இதயங்களை வருடுகிறார்” இளையராஜாவிற்கு புகழாரம் சூட்டிய முதல்வர் மு.க ஸ்டாலின்..! - வைரல் பதிவு இதோ.

ஹிப்ஹாப் ஆதியின் சூப்பர் ஹீரோ அவதாரம்.. ‘வீரன்’ படம் பார்ப்பதற்கான 5 முக்கிய காரணங்கள் இதோ..
சினிமா

ஹிப்ஹாப் ஆதியின் சூப்பர் ஹீரோ அவதாரம்.. ‘வீரன்’ படம் பார்ப்பதற்கான 5 முக்கிய காரணங்கள் இதோ..

உரிய உயரிய அண்ணன் இளையராஜா..! பிறந்தநாள் வாழ்த்து கூறி புகழ்ந்து பதிவிட்ட உலகநாயகன் கமல் ஹாசன் – ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

உரிய உயரிய அண்ணன் இளையராஜா..! பிறந்தநாள் வாழ்த்து கூறி புகழ்ந்து பதிவிட்ட உலகநாயகன் கமல் ஹாசன் – ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..