ஆர்யாவின் ACTION PACKED காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்... கவனத்தை ஈர்க்கும் அசத்தலான SNEAK PEEK வீடியோ இதோ!

ஆர்யாவின் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் பட SNEAK PEEK வீடியோ,arya in kathar basha endra muthuramalingam movie sneak peek video | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களின் ஒருவரான நடிகர் ஆர்யாவின் பக்கா கிராமத்து ஆக்சன் என்டர்டெய்னர் படமாக தற்போது வெளிவந்திருக்கும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தின் SNEAK PEEK வீடியோ தற்போது வெளியானது. தொடர்ந்து தனக்கென தனி பாணியில் அதிரடி ஆக்சன் படங்களில் நடித்து வரும் நடிகர் ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கேப்டன். இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த கேப்டன் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறிய போதும், அடுத்தடுத்து ஆர்யா நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும். 

அந்த வகையில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக தயாராக இருக்கும் சங்கமித்ரா படத்தில் ஆர்யா நடிக்க இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் சுந்தர்.சி இயக்கத் திட்டமிட்டிருந்த சங்கமித்ரா திரைப்படம் சில காரணங்களால் கைவிடப்பட்ட நிலையில், விஷால் மற்றும் ஆர்யா இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க மீண்டும் இயக்குனர் சுந்தர்.சி இயக்க இருக்கும் சங்கமித்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை மையப்படுத்தி ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து மீண்டும் இந்த வெற்றி கூட்டணி சார்பட்டா 2 படத்தில் இணைகிறது. சமீபத்தில் சார்பட்டா 2 பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் விரைவில் அடுத்த கட்ட அறிவிப்புகள் வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான FIR திரைப்படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் Mr.X திரைப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். சர்தார் படத்தின் தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் Mr.X படத்தில் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதனிடையே தனது கொம்பன், மருது, விருமன் வரிசையில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் முதல்முறையாக ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம். ஆர்யாவுடன் இணைந்து வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகி சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ள காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தில் இளைய திலகம் பிரபு, பாக்யராஜ், சிங்கம் புலி, ஆடுகளம் நரேன், தமிழ், மதுசூதன ராவ், அவினாஷ், RK.விஜய் முருகன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ஜி ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில் R.வேல்ராஜ் ஒளிப்பதிவில், வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்ய, காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இனறு ஜூன் இரண்டாம் தேதி காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிள்ளது. இந்நிலையில் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் புதிய SNEAK PEEK வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ட்ரெண்டாகும் அந்த SNEAK PEEK வீடியோ இதோ…
 

பொன்னியின் செல்வன் 2 பட அட்டகாசமான சர்ப்ரைஸ்... மனதை மயக்கும் சின்னஞ்சிறு நிலவே வீடியோ பாடல் இதோ!
சினிமா

பொன்னியின் செல்வன் 2 பட அட்டகாசமான சர்ப்ரைஸ்... மனதை மயக்கும் சின்னஞ்சிறு நிலவே வீடியோ பாடல் இதோ!

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அசத்தலான சூப்பர் ஹீரோ வீரன்... வைரலாகும் அதிரடியான புதிய GLIMPSE இதோ!
சினிமா

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அசத்தலான சூப்பர் ஹீரோ வீரன்... வைரலாகும் அதிரடியான புதிய GLIMPSE இதோ!

இசைப்புயல் ARரஹ்மானின் இசை விருந்து... மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் பட பாடல்கள் இதோ!
சினிமா

இசைப்புயல் ARரஹ்மானின் இசை விருந்து... மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் பட பாடல்கள் இதோ!