"பிரபல நடிகையை கரம் பிடித்த நாடாளுமன்ற MP!"- கோலாகலமாக நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் இதோ!

பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா எம்பி ராகவ் சத்தா நிச்சயதார்த்தம்,Bollywood actress parineeti chopra raghav chadha mp engagement | Galatta

பிரபல பாலிவுட் நடிகை பரினீதி சோப்ராவின் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற எம்பி ராகவ் சத்தாவை, பரினீதி சோப்ரா திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். மிக நெருங்கிய வட்டாரத்தோடு நடைபெற்ற பரினீதி சோப்ரா மற்றும் ராகவ சத்தா நிச்சயதார்த்தத்திற்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். உலக அளவில் பிரபலமான நடிகையாக திகழும் நடிகை பிரியங்கா சோப்ரா அவர்களின் அத்தை மகளான பரினீதி சோப்ரா கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த லேடிஸ் vs ரிக்கி பாய் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர். தொடர்ந்து இஷக்சாதே, சுத் தேசி ரொமான்ஸ், தாவத் ஈ இஷ்க், கில் தில், மேரி பியார் பிந்து, கோல்மால் அகைன், நமஸ்தே இங்கிலாந்து, கேசரி, தி கேர்ள் ஆன் தி ட்ரைன், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு கோட் நேம் - ட்ரையங்கா மற்றும் உன்ஜாய் உள்ளிட்ட படங்களில் நடித்த பரினீதி சோப்ரா நடிப்பில் அடுத்த வெளிவர தயாராகி இருக்கும் திரைப்படம் சம்கிலா. பிரபல பஞ்சாபி பாடகர்கள் மற்றும் பாப் இசைக்கலைஞர்களான அமர் சிங் சம்கிலா மற்றும் அமர்ஜோத் கவுர் ஆகியோரது பயோபிக் படமாக சம்கிலா தயாராகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்கும் கேப்சூல் கில் படத்தில் பரனீதி சோப்ரா கதாநாயகியாக தற்போது நடித்து வருகிறார்.

இதனிடையே நாடாளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர் MP ராகவ் சத்தாவை பரினீதி சோப்ரா திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். ஆம் ஆத்மி கட்சியை சார்ந்த MP ராகவ் சதா மற்றும் பரீனீதி சோப்ரா நீண்ட காலமாக காதலித்து வருவதாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் செய்திகள் தொடர்ந்து வெளிவந்த நிலையில், பரினீதி சோப்ரா மற்றும் ராகவ சத்தா தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை.  இந்த நிலையில் தற்போது பரினீதி சோப்ரா மற்றும் ராகவ சத்தா நிச்சயதார்த்தம் நடைபெற்ற ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 

டெல்லியில் நேற்று (மே 13) நடைபெற்ற இந்த நிச்சயதார்த்தத்தில் பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மண், நடிகை பிரியங்கா சோப்ரா, மனிஷ் மல்கோத்ரா, அபிஷேக் மனு சிங்வி, மற்றும் டெரிக் ஓ ப்ரெய்ன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் இந்த நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டனர். சமீப காலமாகவே பரினீதி சோப்ரா மற்றும் ராகவ சத்தா இருவரும் காதலித்து வருவதாக பாலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்ட போதும் இருவரும் இது குறித்து எதுவுமே பேசாத நிலையில், தற்போது பரினீதி சோப்ரா மற்றும் ராகவ சத்தா நிச்சயதார்த்தம் டெல்லியில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் பரினீதி சோப்ரா மற்றும் ராகவ சத்தா திருமண தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக தங்களது நிச்சயதார்த்த புகைப்படங்களை பரினீதி சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வைரலாகு அந்த புகைப்படங்கள் இதோ…
 

 

View this post on Instagram

A post shared by @parineetichopra

குஷி படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சமந்தாவின் Cute வீடியோ..  – விஜய் தேவரகொண்டா பகிர்ந்த அட்டகாசமான Glimpse இதோ..
சினிமா

குஷி படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சமந்தாவின் Cute வீடியோ.. – விஜய் தேவரகொண்டா பகிர்ந்த அட்டகாசமான Glimpse இதோ..

'பொன்னியின் செல்வன் பாடலாசிரியர்’-‘சீதாராமம் இசையமைப்பாளர்’ உடன் கைகோர்த்த சமுத்திரக்கனி!'- புதிய த்ரில்லர் பட ஸ்பெஷல் அப்டேட்!
சினிமா

'பொன்னியின் செல்வன் பாடலாசிரியர்’-‘சீதாராமம் இசையமைப்பாளர்’ உடன் கைகோர்த்த சமுத்திரக்கனி!'- புதிய த்ரில்லர் பட ஸ்பெஷல் அப்டேட்!

“இயக்குனரா ரொம்ப கஷ்டப்பட்டேன்..தலையே சுத்திடுச்சு.
சினிமா

“இயக்குனரா ரொம்ப கஷ்டப்பட்டேன்..தலையே சுத்திடுச்சு." பிச்சைக்காரன் 2 படம் குறித்து விஜய் ஆண்டனி – சுவாரஸ்யமான நேர்காணல் உள்ளே..