ரசிகர்கள் கொண்டாடிய 'ராக்கி' படம் ஓடிடி ரிலீஸ் எப்போது..? - கேப்டன் மில்லர் இயக்குனர் கொடுத்த பதில்.. வைரல் பதிவு இதோ..

ஒடிடியில் ராக்கி படம் எப்போது இயக்குனர் கொடுத்த பதில் -  Arun Matheswaran about rocky movie ott release | Galatta

தற்போது கோலிவுட் வட்டாரத்தில் அதிகம் பேசப்படும் இயக்குனர்களில்  ஒருவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். காரணம் தென்னிந்தியாவின் முன்னணி நடிகரான தனுஷ் அவர்கள் நடித்து வரும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தை இயக்கி வருவதால் அருண் மாதேஸ்வரனுக்கு தனி மவுசு தற்போது இருந்து வருகிறது. பிரம்மாண்டமாக பீரியட் திரைப்படமாக உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. சத்ய ஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின்முதல் பார்வை வரும் ஜூன் மாதத்திலும் டீசர் வரும் ஜூலை மாதத்தில் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அவர்களை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் “ராக்கி திரைப்படம் எப்போது ஒடிடில் வெளியாகும். அந்த படம் வெளியாகி 2 வருடங்கள் முடிந்து விட்டது.” என்று கேட்டுள்ளார். இதையடுத்து அவரது பதிவில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் “உங்களுக்கு பதில் தர நான் விரும்புகிறேன்..”  என்று பதிலளித்துளார். இதையடுத்து அவரது பதில் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.  

I wish I had an answer.. :)

— Arun Matheswaran (@ArunMatheswaran) May 12, 2023

RA தயாரிப்பு நிருவனம் தயாரிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கிய திரைப்படம் ‘ராக்கி’. இப்படத்தில் தரமணி பட புகழ் வசந்த் ரவி, இயக்குனர் பாரதி ராஜா, ரவீனா ரவி, ரோகினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய நாகூரான் ராமசந்திரன் படத்தொகுப்பு செய்திருப்பார். படம் தயாராகி பல வருடங்களான நிலையில் ராக்கி இயக்குனர் விக்னேஷ் சிவன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ‘ரவுடி பிக்சர்ஸ்’ அப்படத்தை வாங்கி கடந்த 2021 ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியிட்டது.  இப்படத்திற்காக நயன்தாரா, வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்த சிறப்பு முன்னோட்டமும் வெளியானது. ரத்தம், குடல் என்று குரூரத்தின் உச்சக்கட்டத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய அளவு இணையத்தில் வைரலானது.படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இருந்து ரசிகர்களுக்கு இப்படம் தரமான ஆக்ஷன் படமாக இருந்தது. இருப்பினும் இப்படத்தை எந்தவொரு ஒடிடி தளமும் வாங்கி வெளியிட முன்வரவில்லை. இந்த ஒரு சிக்கலிலே படம் நீண்ட நாட்களால ஒடிடியில் வெளியாகாமல் இருந்து வருகிறது. அருண் மாதேஸ்வரன் ராக்கி படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் கூட்டணியில் ‘சாணி காகிதம்’ திரைப்படத்தை முடித்து வெளியிட்டு தற்போது தனுஷ் கூட்டணியில் மும்முரம் காட்டினாலும் ரசிகர்களுக்கு அவரது முதல் படமான ராக்கி தனி விருப்ப பட்டியலில் இருந்து வருகிறது.  கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியீட்டுக்கு பின் ராக்கி திரைப்படம் ஒடிடியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

“இயக்குனரா ரொம்ப கஷ்டப்பட்டேன்..தலையே சுத்திடுச்சு.
சினிமா

“இயக்குனரா ரொம்ப கஷ்டப்பட்டேன்..தலையே சுத்திடுச்சு." பிச்சைக்காரன் 2 படம் குறித்து விஜய் ஆண்டனி – சுவாரஸ்யமான நேர்காணல் உள்ளே..

“ஒரு சில இனத்தினரை காயப்படுத்தியுள்ளதா?” இராவண கோட்டம் படம் குறித்த வதந்திகளுக்கு விளக்கமளித்த படக்குழு.. – வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“ஒரு சில இனத்தினரை காயப்படுத்தியுள்ளதா?” இராவண கோட்டம் படம் குறித்த வதந்திகளுக்கு விளக்கமளித்த படக்குழு.. – வைரலாகும் பதிவு இதோ..

சூப்பர் டீலக்ஸ் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் அடுத்த அட்டகாசமான படைப்பு... மனதை கவரும் மாடர்ன் லவ் சென்னை ட்ரெய்லர் இதோ!
சினிமா

சூப்பர் டீலக்ஸ் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் அடுத்த அட்டகாசமான படைப்பு... மனதை கவரும் மாடர்ன் லவ் சென்னை ட்ரெய்லர் இதோ!