'வேகமெடுக்கும் சுந்தர்Cயின் அரண்மனை 4!'- தமன்னா கொடுத்த மாஸ் அப்டேட்... வைரலாகும் புது SHOOTING SPOT GLIMPSE இதோ!

சுந்தர்Cயின் அரண்மனை 4 அப்டேட் கொடுத்த தமன்னா,tamannaah shared a shooting spot photo of aranmanai 4 movie sundar c | Galatta

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனராகவும் நடிகராகவும் திகழும் இயக்குனர் சுந்தர்.Cயின் அரண்மனை சீரிஸ் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி ஆர்வம் உண்டு. அந்த வகையில் தற்போது அரண்மனை 4 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக இயக்குனர் சுந்தர்.C தனது திரைப்பயணத்தில் முதல் முறை கதாநாயகனாக நடிக்க, கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான தலைநகரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து 17 ஆண்டுகள் கழித்து தலைநகரம் 2 திரைப்படம் தற்போது தயாராகி இருக்கிறது. அஜித் குமாரின் முகவரி, சிலம்பரசன்.TRன் தொட்டி ஜெயா, பரத்தின் நேபாளி, ஷாமின் 6 மெழுகுவர்த்திகள் மற்றும் சுந்தர்.C-யின் இருட்டு உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் VZ.துரை இயக்கத்தில் சுந்தர்.C நடித்திருக்கும் தலைநகரம் 2 திரைப்படத்தை வரும் ஜூன் மாதம் வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரம்மாண்டமான சங்கமித்ரா திரைப்படத்தை இயக்க சுந்தர்.C திட்டமிட்டு இருந்தார். அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் தொடர்ந்து வெளியான நிலையில் சில காரணங்களால் அத்திரைப்படம் தடைபட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் சங்கமித்ராவை சுந்தர்.C கையில் எடுத்திருக்கிறார். சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், சங்கமித்ரா திரைப்படத்தை இயக்குனர் சுந்தர்.C தொடங்க இருப்பது ரசிகர்களிஙடைய உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக ஜெயம் ரவி மற்றும் ஆர்யா இணைந்து நடிக்க இருந்த சங்கமித்ரா திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு பதிலாக விஷால் இணைய இருப்பதாக தெரிகிறது. நடிகர் ஆர்யா சங்கமித்ரா திரைப்படத்திற்காக WORKOUT செய்யும் வீடியோவை வெளியிட்டு இருப்பதால் விரைவில் சங்கமித்ரா திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரும், விரைவில் இதன் படப்பிடிப்பும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தன்னுடைய ஃபேவரட்டான அரண்மனை சீரிஸின் அடுத்த பாகமாக அரண்மனை 4 படத்தை சுந்தர்.C தொடங்கிவிட்டார். முன்னணி கதாபாத்திரத்தில் சுந்தர்.C நடிக்க, அவரது தங்கை கதாபாத்திரத்தில் ராஷி கண்ணா நடிக்கிறார். கதையின் நாயகியாக நடிகை தமன்னா நடிக்க, முக்கிய வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். மேலும் கே ஜி எஃப்-ல் கருடா கதாபாத்திரத்தில் நடித்த ராமச்சந்திர ராஜு, வைகைப்புயல் வடிவேலு, கே.பாக்யராஜ், மீனா, கோவை சரளா மற்றும் மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிப்பதாக தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரண்மனை 4 திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் சந்தானமும் இணைந்த நடிப்பதாக பேசப்பட்டது. பின்னர் அடுத்தடுத்து பல படங்களில் நடிப்பதால் கால்ஷீட் காரணமாக விஜய் சேதுபதி அரண்மனை 4 படத்திலிருந்து விலகியதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட அரண்மனை 4 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து புதிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை தமன்னா பதிவிட்டு அரண்மனை 4 ஷூட்டிங்கில் இருப்பதை ரசிகர்களோடு பகிர்ந்துள்ளார். சோசியல் மீடியாவில் வைரலாகும் அரண்மனை 4 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ…
captain miller director arun matheswaran answered when rocky will be released in ott

'பொன்னியின் செல்வன் பாடலாசிரியர்’-‘சீதாராமம் இசையமைப்பாளர்’ உடன் கைகோர்த்த சமுத்திரக்கனி!'- புதிய த்ரில்லர் பட ஸ்பெஷல் அப்டேட்!
சினிமா

'பொன்னியின் செல்வன் பாடலாசிரியர்’-‘சீதாராமம் இசையமைப்பாளர்’ உடன் கைகோர்த்த சமுத்திரக்கனி!'- புதிய த்ரில்லர் பட ஸ்பெஷல் அப்டேட்!

“இயக்குனரா ரொம்ப கஷ்டப்பட்டேன்..தலையே சுத்திடுச்சு.
சினிமா

“இயக்குனரா ரொம்ப கஷ்டப்பட்டேன்..தலையே சுத்திடுச்சு." பிச்சைக்காரன் 2 படம் குறித்து விஜய் ஆண்டனி – சுவாரஸ்யமான நேர்காணல் உள்ளே..

“ஒரு சில இனத்தினரை காயப்படுத்தியுள்ளதா?” இராவண கோட்டம் படம் குறித்த வதந்திகளுக்கு விளக்கமளித்த படக்குழு.. – வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“ஒரு சில இனத்தினரை காயப்படுத்தியுள்ளதா?” இராவண கோட்டம் படம் குறித்த வதந்திகளுக்கு விளக்கமளித்த படக்குழு.. – வைரலாகும் பதிவு இதோ..