உலக அளவில் மிகவும் பிரபலமான பிக் பிரதர் நிகழ்ச்சியின் இந்திய வெர்சன் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்திய தொலைக்காட்சி இரசிகர்களின் மிகவும் அதிகமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை ஹிந்தியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். 

மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஏழு இந்திய மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. தமிழில் இதுவரை நான் சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசனின் தொடக்கமாக சில தினங்களுக்கு முன்பு புதிய ப்ரோமோ டீசர் வெளியானது.

பிக் பாஸ் தமிழ் ஐந்தாவது சீசனிலும் உலகநாயகன் கமல்ஹாசனின் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களாக பல நட்சத்திரங்களின் பெயர்கள் சமூக இணையதளங்களில் உலா வருகிறது. இந்நிலையில் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் பின்னரான சித்தார்த் சுக்லா காலமானார்.

ஹிந்தியில் நடந்துமுடிந்த பிக் பாஸ் சீசன் 13 வெற்றியாளரான சித்தார்த் சுக்லா திடீரென மாரடைப்பால் காலமானார். பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளருமான சித்தார்த் சுக்லாவில் வயது 40. இவரது மறைவுக்கு பாலிவுட் திரையுலகமும் பிக்பாஸ் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.