ஹாலிவுட் திரைப்படங்களிலேயே மார்வெல் ஸ்டுடியோஸின் திரைப்படங்கள் மீது ரசிகர்களுக்கு அலாதி பிரியம் உண்டு. அயன் மேன், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், தோர்,  பிளாக் விடோ, ஸ்பைடர் மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்,  பிளாக் பேந்தர் என பலவிதமான சூப்பர் ஹீரோக்களை கொண்ட மார்வெல் ஸ்டுடியோ ரசிகர் பட்டாளம் உலகெங்கும் பரவிக் கிடக்கிறது. 

கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்தில் பல   முன்னணி சூப்பர் ஹீரோக்கள் விடை பெறுவதாக அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் மிகவும் வருத்தப்பட்டனர். தொடர்ந்து வெளிவந்த ஸ்பைடர்மேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தி ஃபால்கன் அண்ட் தி வின்டர் சோல்ஜர் திரைப்படம் ஹாட்ஸ்டார்-ல் வெப்சீரிஸாக வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 

அடுத்ததாக மார்வல் ஸ்டுடியோஸின் அடுத்த திரைப்படமாக திரைக்கு வருகிறது பிளாக் விடோ. ஸ்கார்லெட் ஜான்சன்-ன் மிரட்டலான நடிப்பில் உருவாகியிருக்கும் பிளாக் விடோ கதாபாத்திரத்தை மார்வெல் ஸ்டுடியோஸின்  அனேக திரைப்படங்களில் நாம் பார்த்திருப்போம். அயன் மேன் இரண்டாம் பாகம் அவெஞ்சர்ஸ் சீரிஸ்  என அனைத்திலும் பிளாக் விடோவின் நடிப்பும் ஆக்ஷன் காட்சிகளும் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டது. 

வருகிற ஜூன் மாதம் 9 தேதி திரைக்கு வரவுள்ள பிளாக் விடோ திரைப்படத்திலிருந்து ஒரு காட்சியை தற்போது யூடியூபில் வெளியிட்டுள்ளது பட தயாரிப்பு நிறுவனம். முன்னதாக பிளாக் விடோ  திரைப்படத்தின் ட்ரைலர்கள் வெளியிடப்பட்ட நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர் தற்போது படத்தில் இருந்து ஓர் முக்கியமான  ஆக்ஷன் காட்சியில் டியூபில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. 

முன்னதாக வெளியான கடைசி டிரெய்லரில் இத்திரைப்படத்தை தொடர்ந்து மார்வெல் தயாரிப்பில் அடுத்தடுத்து வெளிவர உள்ள சூப்பர்ஹீரோ திரைப்படங்களின் பட்டியல் வெளியானது இனி மார்வல் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு அளவே இருக்காது என சொல்லலாம்.