இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் வித்யாபாலன். கிட்டத்தட்ட 18 வருடங்களாக திரைத்துறையில் இருக்கும் வித்யாபாலன் ஹிந்தி, பெங்காலி, மராத்தி, மலையாளம், தமிழ் என இந்தியாவின் பல மொழிகளில் நடித்துள்ளார். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட தி டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். 

இந்திய சினிமாவில் சிறந்த நடிகைகளில் ஒருவராக பல மொழிகளில் நடித்துள்ள வித்யாபாலன்  தமிழில் கடைசியாக நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்திருந்தார். கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான சகுந்தலா தேவி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சகுந்தலா தேவி என்ற இந்தியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கணித மேதையின் வாழ்க்கை வரலாற்றை  தழுவி எடுக்கப்பட்ட அத்திரைப்படத்தில் சகுந்தலாதேவி கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தினார் வித்யாபாலன். 

இந்நிலையில் வித்யாபாலன் நடிக்கும் அடுத்த திரைப்படமான ஷெர்னி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு இணையதளத்தில் வெளியானது .  நியூட்டன் திரைப்படத்தின் இயக்குனர் அமீத் மசுர்கர்  இத் திரைப்படத்தை இயக்க Tசீரீஸ் நிறுவனமும் அபன்டன்டியா  என்டர்டைன்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. 

வரும் ஜூன் மாதம் அமேசான் பிரைம் OTT  தளத்தில் நேரடியாக இத்திரைப்படம் வெளிவர உள்ளது.வனத்துறை அதிகாரியாக வித்யாபாலன் திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் தகவல் வெளியாகி உள்ள நிலையில் இத்திரைப்படத்தின் ரிலீஸ் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.