பிகில் பட பாடல் படைத்த பிரம்மாண்ட சாதனை !
By Aravind Selvam | Galatta | October 06, 2020 18:20 PM IST

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிகில்.ஏ.ஜி.எஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.ஏ.ஆர்.ரஹ்மா
பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார்.கதிர்,விவேக்,
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்த இந்த படம் பட்டிதொட்டி எங்கும் உள்ள ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 300 கோடிகளை வசூல் செய்தது.கடந்த வருடத்தின் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றிருந்தது பிகில்.ரஹ்மான் இசையில் இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் செம ரீச்சை பெற்றிருந்தன.ஆல்பம் வெளியான அனைத்து தளங்களிலும் சூப்பர்ஹிட் முடித்திருந்தது.
இந்த படத்தில் முதல்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாடியிருந்தார்.இந்த படத்தின் பாடல்கள் யூடியூப்பில் 300 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை புடைத்திருந்தது.கொரோனா பாதிப்பு காரணமாக ஷூட்டிங்குகள்,திரையரங்குகள் உள்ளிட்டவை எதுவும் நடைபெறாமல் இருந்தன.சில இடங்களில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து திரையங்குகள் திறக்கப்பட்டு வருகின்றன.சில இடங்களில் பிகில் திரையிடப்பட்டு வருகிறது.
பிகில் திரைப்படம் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் எப்பக்கட்ட கிராபிக்ஸ் காட்சிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன.அப்படி உருவான காட்சிகள் குறித்த ஒரு வீடீயோவை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தில் இடம்பெற்றிருந்த சூப்பர்ஹிட் பாடலான சிங்கப்பெண்ணெ பாடல் மியூசிக் வீடியோ சமீபத்தில் 1 மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.இந்த சாதனையை வெறித்தனம் லிரிக் வீடியோவிற்கு அடுத்து இந்த சாதனையை படைத்துள்ளது.மேலும் 1 மில்லியன் லைக்குகளை பெரும் 7ஆவது விஜய் பாடல் என்ற சாதனையையும் இந்த பாடல் படைத்துள்ளது.தற்போது சிங்கப்பெண்ணே பாடலின் வீடியோ பாடல் யூடியூப்பில் 70 மில்லியன் வியூக்களை கடந்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.இதனை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
Kajal Aggarwal's unseen pictures with her future husband goes viral - check out!
06/10/2020 05:17 PM