தளபதி விஜய் நடிப்பில் 2016 சம்மருக்கு வெளியாகி சக்கைபோடு போட்ட திரைப்படம் தெறி.ராஜா ராணி படத்தின் வெற்றியை அடுத்து தளபதி விஜயுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்தார் அட்லீ.ஜீ.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.வி க்ரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரித்திருந்தனர்.

சமந்தா,ஏமி ஜாக்சன் இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தனர்.பேபி நைனிகா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இயக்குனர் மஹேந்திரன்,பிரபு,ராதிகா,மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த படம் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

குறிப்பாக இந்த படத்தில் அறிமுகமான நடிகை மீனாவின் மகள் நைனிகாவின் நடிப்பு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.பலரும் இவரது மழலை நடிப்பை பாராட்டி வந்தனர்.வசூல் ரீதியாகவும் இந்த படம் பெரிய வெற்றியை பெற்று தந்தது.2016-ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை தெறி பெற்றிருந்தது.

ஜீ.வி.யின் 50வது படமான இந்த படத்தின் பாடல்கள் சூப்பர்ஹிட் அடித்திருந்தன.இந்த படத்தின் ஆல்பம் யூடியூபில் 300 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.இது விஜய் அட்லீ கூட்டணியில் வரும் 3ஆவது 300 மில்லியன் ஆல்பம் ஆகும்.விஜய்க்கு இது 4ஆவது ஆல்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடல்களில் ஒன்றான ஈனா மீனா டீகா பாடல் வீடியோ யூடியூபில் 75 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை பெற்றுள்ளது.விஜயுடன் நைனிகாவின் கியூட்டான நடனமும் சேர்ந்து கொள்ள இந்த பாடல் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்திருந்தது.இதனை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த படம் நேற்று சன் டிவியில் ஒளிபரப்பானது.இந்த படம் பார்ப்பது குறித்தும்,தங்களது மனம் கவர்ந்த சீன் குறித்தும் பல ரசிகர்களும்,பிரபலங்களும் ஆர்வமாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.அந்த வகையில் தற்போது பிக்பாஸ் தொடரின் மூலம் மிகவும் பிரபலமான தர்ஷன் இது குறித்து பதிவிட்டுள்ளார்,யாரெல்லாம் DCP விஜயகுமாரை தெறி 2வில் மீண்டும் பார்க்கவேண்டும் என்று ஆர்வமாக உள்ளீர்கள் என்று பதிவிட்ட அவர்,விஜயும்-அட்லீயும் ஒரு ப்ளாக்பஸ்டர் வெற்றி கூட்டணி என்றும் பதிவிட்டிருந்தார்.இந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இந்த ட்விட்டை கீழே உள்ள லிங்கில் காணலாம்