ரெய்டு: ஜப்பான், ஜிகர்தண்டா DOUBLEX படங்களுடன் தீபாவளி ரேசில் இறங்கும் விக்ரம் பிரபுவின் ஆக்சன் பட விறுவிறுப்பான ட்ரெய்லர் இதோ!

விக்ரம் பிரபுவின் ரெய்டு பட விறுவிறுப்பான ட்ரெய்லர் வெளியீடு,vikram prabhu in raid movie trailer out now | Galatta

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் அதிரடி ஆக்சன் படமாக வெளிவர இருக்கும் ரெய்டு திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக தொடர்ந்து பல்வேறு விதமான கதைக்களங்களில் நடித்துவரும் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் இந்த 2023 ஆம் ஆண்டில் இதுவரை மூன்று படங்கள் வந்திருக்கின்றன. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக வந்த பொன்னியின் செல்வன் 2 படத்தில் பார்த்திபேந்திர பல்லவன் கதாபாத்திரத்தில் நடித்த விக்ரம் பிரபு தொடர்ந்து வெளிவந்த பாயும் ஒலி நீ எனக்கு திரைப்படத்தில் கண் பார்வை குறைபாடு உள்ள ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து சமீபத்தில் இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் அழகிய காதல் படமாக வந்த இறுகப்பற்று திரைப்படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்திருந்தார். கடந்த மாதம் ரிலீஸான இறுகப்பற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த வரிசையில் தீபாவளி வெளியீடாக விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் தான் ரெய்டு.இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த ரெய்டு திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் அனந்திகா, ரிஷி ரித்விக் மற்றும் சௌந்தரராஜா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த ரெய்டு திரைப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார். கொம்பன் மருது விரும்பன் என பக்கா மாஸ் கமர்சியல் படங்களை கொடுத்த இயக்குனர் முத்தையா இந்த ரெய்டு திரைப்படத்திற்கு வசனங்கள் எழுதியிருக்கிறார். கதிரவன் ஒளிப்பதிவில் மணிமாறன் படத்தொகுப்பு செய்துள்ள இந்த ரெய்டு திரைப்படத்திற்கு வீரமணி கணேசன் கலை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். பக்கா மாஸ் ஆக்சன் படமாக வர இருக்கும் இந்த ரெய்டு திரைப்படத்திற்கு கே.கணேஷ் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். ரெய்டு திரைப்படத்தின் பாடல்களுக்கு கல்யாண் மாஸ்டர், பாபா பாஸ்கர் மாஸ்டர் மற்றும் சந்தோஷ் ஆகியோர் நடன இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். மோகன் ராஜா, S.ஞானக்கரவேல் மற்றும் சாம்.சி.எஸ் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். 

வருகிற நவம்பர் 10ஆம் தேதி தீபாவளி வெளியீடாக ரெய்டு திரைப்படம் உலகம் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதே நவம்பர் 10ஆம் தேதி தீபாவளி வெளியீடாக இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்திருக்கும் ஜப்பான் திரைப்படமும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்திருக்கும் ஜிகர்தண்டா DOUBLEX திரைப்படமும் ரிலீஸ் ஆகின்றன.வெவ்வேறு விதமான ஆக்சன் என்டர்டெய்னர் படங்களாக இந்த மூன்று திரைப்படங்களும் ரிலீஸ் ஆகின்றன. எனவே இந்த தீபாவளி ரசிகர்களுக்கு பக்கா சரவெடி தீபாவளியாக இருக்கும் என்பது சந்தேகமில்லை. தீபாவளி ரேசில் இறங்கும் விக்ரம் பிரபுவின் அதிரடியான ரெய்டு பட ட்ரெய்லர் இதோ...