இந்தியன் 2 AN INTRO: "வணக்கம் இந்தியா இந்தியன் IS BACK!" வீரசேகரன் சேனாபதியாக மிரட்டும் உலகநாயகன் கமல்ஹாசனின் அதிரடியான டீசர் இதோ!

உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 AN INTRO டீசர்,ulaganayagan kamalhaasan in indian 2 an intro out now | Galatta

ஒட்டு மொத்த இந்திய சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் உலக நாயகனின் இந்தியன் 2 பட முதல் GLIMPSE வீடியோவாக இந்தியன் 2 AN INTRO என்ற டீசர் வீடியோ தற்போது வெளியானது. இந்த இந்தியன் 2 AN INTRO - GLIMPSE வீடியோவை தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலையாளத்தில் நடிகர் மோகன்லால், தெலுங்கில் இயக்குனர் SS.ராஜமௌலி, ஹிந்தியில் நடிகர் ஆமீர் கான் மற்றும் கன்னடத்தில் நடிகர் கிச்சா சுதீப் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் இயக்குனர் சங்கரின் வழக்கமான சிறப்பம்சங்கள் நிறைந்த டீசர் வீடியோவாக வெளிவந்திருக்கும் இந்த இந்தியன் 2 AN INTRO ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ராக் ஸ்டார் அனிருத் இசையில், #COMEBACKINDIAN என்ற பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்தியன் முதல் பாகத்தின் கிளைமாக்ஸில் இடம்பெறும் “இந்தியனுக்கு சாவே கிடையாது” என்ற காட்சியோடு ஆரம்பிக்கும் இந்த டீசரில் உடல் முழுக்க கட்டு கட்டாக பணக்கட்டுகள் வைத்திருக்கும் சித்தார்த், பாபி சிம்ஹாவுடன் வெடிகுண்டு நிபுணராக மறைந்த நடிகர் விவேக் மற்றும் படத்தில் முன்னணி கதாபாத்திரங்கள் பலரும் இந்த டீசரில் இடம் பெற்றுள்ளனர். டீசரின் இறுதி வினாடிகளில் இந்தியன் 2 திரைப்படத்தின் புதிய லுக்கில் வீரசேகரன் சேனாதிபதி கதாபாத்திரத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தோன்றி "வணக்கம் இந்தியா இந்தியன் இஸ் பேக்" என மிரட்டி இருக்கிறார். இந்திய சினிமா ரசிகர்களுக்கு தொடர்ந்து மிக பிரம்மாண்டமான திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் ஷங்கர் உடன் 2வது முறையாக இணைந்திருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்த  பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வருகிற திரைப்படம் தான் இந்தியன் 2. கடந்த 1996 ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக மீண்டும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். 

கமல்ஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுள் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, SJ. சூர்யா, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா, ஹாலிவுட் நடிகர் பெனிடிக்ட் கேரெட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விக்ரம் படத்திற்கு பிறகு கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திற்கும் ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார்.சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டு உலகநாயகன் கமல்ஹாசன் டப்பிங் ஈடுபடும் வீடியோக்கள் வெளிவந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 2024 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கபடும் படங்களில் ஒன்றாக தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படம் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் படம் என்பதால் இன்னும் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 AN INTRO டீசர் இதோ…