லியோ வெற்றி விழா: "நா ரெடி" என பாடி அட்டகாசமாக பேசி ரசிகர்களை மகிழ்வித்த தளபதி விஜய்... கலக்கலான முதல் ப்ரோமோ இதோ!

தளபதி விஜயின் லியோ வெற்றி விழா நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ,thalapathy vijay in leo success meet first promo | Galatta

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற லியோ திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தின் முதல் ப்ரோமோ வெளியானது. "நா ரெடி" பாடலை பாடியபடியே ஸ்டைலாக சிக்னேச்சர் ஸ்டெப் போட்ட தளபதி விஜய் தன் ரசிகர்கள் முன்பு பேசும் லியோ திரைப்படத்தின் கலக்கலான இந்த முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளிவந்து அனைவரையும் கவர்ந்துள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் தளபதி விஜய் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை சந்திப்பதும் இசை வெளியீட்டு விழாக்களில் முக்கிய அம்சமாக இருக்கும் தளபதி விஜயின் குட்டி ஸ்டோரியும் லியோ திரைப்படத்தில் மிஸ் ஆனது. சில பாதுகாப்பு காரணங்களுக்காக லியோ திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இந்த நிலையில் ரசிகர்களின் மகிழ்ச்சியை மனதில் கொண்டு லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்த படக்குழுவினர் அதற்கான முழு அனுமதியையும் பெற்று வழக்கமாக இசை வெளியீட்டு விழா நடக்கும் அதே நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவை கொண்டாடி இருக்கின்றனர்.

சமீப காலமாக தளபதி விஜய் அவர்களை சுற்றி வரும் ஒவ்வொரு ட்ரெண்டிங் மற்றும் சர்ச்சைக்குரிய விஷயங்கள் ஒவ்வொன்றையும் குறிப்பிடும் வகையில் தளபதி விஜய் இந்த லியோ வெற்றி விழாவில் பேசியது ரசிகர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து சமீப காலமாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய மோதல்கள் வெடித்த நிலையில், “புரட்சித்தலைவர் என்றால் ஒருவர் தான்.. நடிகர் திலகம் என்றால் ஒருவர் தான்.. புரட்சிக் கலைஞர் கேப்டன் என்றால் ஒருவர் தான்… உலகநாயகன் என்றால் ஒருவர் தான்… சூப்பர் ஸ்டார் என்றாலும் அது ஒருவர் தான்… தல என்றால் அதுவும் ஒருவர் தான்…” என பேசியதும் ஒட்டுமொத்த அரங்கமும் ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்தது. தொடர்ந்து, “தளபதி என்றால் உங்களுக்கு என்ன என்று தெரியும் அல்லவா மன்னர்களுக்கு கீழே இருப்பவர் என்னை பொறுத்தவரையில் ரசிகர்களும் மக்களும் ஆகிய நீங்கள் தான் மன்னர்கள் உங்களின் தளபதி தான் நான். அப்படியே இருக்கிறேன் நீங்கள் ஆணையிடுங்கள் அதை செய்கிறேன்” என பேசியது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என சொல்வது போல், அரசியல் வருகையை குறித்தும் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சைகளுக்கும் தன் பாணியில் ஸ்டைலாக பதில் அளித்தார் தளபதி விஜய்.

மாஸ்டர் படத்திற்கு பிறகு 2வது முறையாக இணைந்த தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவந்திருக்கும் இந்த லியோ திரைப்படம் வெளிவந்த முதல் 12 நாட்களிலேயே 540 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் சாதனையை படைத்திருக்கும் நிலையில் வரும் நாட்களில் இன்னும் பெரிய சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடந்து முடிந்த லியோ வெற்றி விழா நிகழ்ச்சி வருகிற நவம்பர் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணி அளவில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதனை அறிவிக்கும் வகையில் தற்போது வெளிவந்திருக்கும் கலக்கலான முதல் ப்ரோமோ இதோ…