இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித்தின் 50-வது திரைப்படமான உருவான மங்காத்தா திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் மஹத் ராகவேந்திரா. பிறகு தளபதி விஜய் நடித்த ஜில்லா, நடிகர் சிலம்பரசனின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன், வந்தா ராஜாவா தான் வருவேன், வெங்கட் பிரபுவின் சென்னை 600028-II படத்திலும் நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வரும்  மஹத் ராகவேந்திரா விஜய் தொலைக்காட்சியின் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகுந்த பிரபலம் அடைந்தார்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர்  மஹத் ராகவேந்திரா நடிகை யாஷிகா இணைந்து நடித்த இவன் தான் உத்தமன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

பிறகு இந்தியாவின் பிரபல மாடல் அழகிகளில் ஒருவரான ப்ராச்சி மிஸ்ராவை  காதலித்து திருமணம் செய்துகொண்டார். முன்னதாக  மஹத் ராகவேந்திராவின் மனைவி ப்ராச்சி மிஸ்ராவின் வளைகாப்பு நிகழ்ச்சி  நடைபெற்று அதன் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. 

இந்நிலையில் தற்போது நடிகர்  மஹத் ராகவேந்திரா ப்ராச்சி மிஸ்ரா தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை நடிகர்  மஹத் ராகவேந்திரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும்  “நானும் ப்ராச்சியும் அளவில்லாத மகிழ்ச்சியில் திளைத்து இருக்கிறோம் அனைவரது அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி” ,“தந்தையானது மிகவும் உற்சாகமாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார். திரையுலகைச் சேர்ந்த பலரும் மஹத் ராகவேந்திரா மற்றும் ப்ராச்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.