காக்க காக்க படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து தனது வித்தியாசமான திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் கெளதம் மேனன்.இவர் இயக்கத்தில் ஜோஷுவா,துருவ நட்சத்திரம்,வெந்து தணிந்தது காடு படங்களை இயக்கி வருகிறார் கெளதம் மேனன்.

ஜோஷுவா இமை போல் காக்க படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளனர்.இந்த படத்தில் தற்போதைய பிக்பாஸ் சீசன் 5-ல் அசத்தி வரும் வருண் ஹீரோவாக நடித்துள்ளார்.Raahei இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.

பிரபல பாடகர் கார்த்திக் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் மற்றும் சில பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்திருந்தது.இந்த படத்தின் ரிலீஸ் சில தவிர்க்கமுடியாத காரணங்களால் சில வருடங்களாக தள்ளிப்போனது.

தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.அதிரடியான இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை ஏற்றியுள்ள இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்