பிரபல மாடலாக இருந்து பின்னர் தொகுப்பாளினியாக மாறி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பூஜா ராமசந்திரன்.இதனை தொடர்ந்து நண்பன்,பீட்சா உள்ளிட்ட படங்களில் நடித்து சினிமாவிலும் தனது என்ட்ரியை கொடுத்தார் பூஜா.

தமிழ் மட்டுமின்றி மலையாளம்,தெலுங்கு உள்ளிட்ட  மொழிகளிலும் சில சூப்பர்ஹிட் படங்களில் முக்கிய வேடங்க்ளில் நடித்து அசத்தியுள்ளார்.இவற்றை தவிர பிக்பாஸ் தெலுங்கு உள்ளிட்ட சில டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார் பூஜா ராமசந்திரன்.இவர் நடிப்பில் கடைசியாக அந்தகாரம் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இவர் ஜான் கொக்கென் என்பவரை கடந்த 2019-ல் திருமணம் செய்துகொண்டார்.தென்னிந்திய படங்களில் வில்லன் நடிகராக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஜான் , சமீபத்தில் வெளியான சர்பட்டா படத்தில் முக்கிய வில்லனாக நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார்.

இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் பூஜா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார் பூஜா.கிறிஸ்த்துமஸை முன்னிட்டு தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.