பிக்பாஸ் தமிழ் சீசன் 7: மிக்ஜாங் புயல் காரணமாக எலிமினேஷனில் பெரிய மாற்றம்... ஹவுஸ் மேட்ஸ்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!

மிக்ஜாங் புயல் காரணமாக பிக்பாஸ் தமிழ் சீசன் 7 எலிமினேஷனில் மாற்றம்,Bigg boss tamil season 7 elimination cancelled due to michaung cyclone | Galatta

மிக்ஜாங் புயல் காரணமாக பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் இந்த வார எலிமினேஷனில் பெரிய மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. வழக்கம்போல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷன் ரத்து செய்யப்பட இருக்கிறது. ஒட்டுமொத்தமாக சென்னையை உலுக்கி இருக்கும் மிக்ஜாங் புயல் காரணமாக இந்த வார ரத்து செய்யப்படுவதாக விஜய் தொலைக்காட்சி தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இது குறித்து விஜய் தொலைக்காட்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் முக்கிய பதிவில், "மிக்ஜாங் புயலின் காரணமாக பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்க இயலாததால் இந்த வார எலிமினேஷன் ரத்து செய்யப்படுகிறது" என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறது. வெளியில் பயங்கரமான அதீத கனமழை வெள்ளப்பெருக்கு என மொத்த சென்னையும் ஸ்தம்பித்து இருப்பது பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு தெரியாது அதை போல் இந்த எலிமினேஷன் ரத்து செய்யப்பட்ட அறிவிப்பும் அவர்களுக்கு தற்போது தெரிவிக்கப்படாது என தெரிகிறது இதை இன்ப அதிர்ச்சியாக வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடுகளில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக வந்திருக்கும் எலிமினேஷன் ரத்து செய்யப்பட்ட அறிவிப்பு இதோ...

 

 

View this post on Instagram

A post shared by Vijay Television (@vijaytelevision)

இந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில், கூல் சுரேஷ் (நடிகர்), பவா செல்லதுரை (எழுத்தாளர், பேச்சாளர்) , விசித்ரா (நடிகை), விஷ்ணு (சின்னத்திரை நடிகர்),  வினுஷா தேவி (சின்னத்திரை நடிகை), பிரதீப் ஆண்டனி (நடிகர்), அக்ஷயா உதயகுமார் (நடிகை லவ் டுடே), ஐஷு (நடனக்கலைஞர்), சரவண விக்ரம் (சின்னத்திரை நடிகர் பாண்டியன் ஸ்டோர்ஸ்), ஜோவிகா விஜயகுமார் (வனிதா விஜயகுமாரின் மகள்), யுகேந்திரன் (பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன்), ரவீனா தாஹா (சின்னத்திரை நடிகை), மணி சந்திரா (நடன இயக்குனர்), விஜய் வர்மா (நடன இயக்குனர்), பூர்ணிமா ரவி (நடிகை), மாயா கிருஷ்ணன் (நடிகை), அனன்யா S ராவ் (இன்ஸ்டாகிராம் பிரபலம்) என 18 போட்டியாளர்கள் களமிறங்கினர். இதைத் தொடர்ந்து முதல் வைல்டு கார்டு என்ட்ரியாக தினேஷ் (சநடிகர்), விஜே அர்ச்சனா (நடிகை), RJ பிராவோ (இன்ஸ்டாகிராம் பிரபலம், ரேடியோ ஜாக்கி) கானா பாலா (கானா & சினிமா பின்னணி பாடகர்) அன்ன பாரதி பட்டிமன்ற பேச்சாளர் ஆகிய ஐந்து பேரும் ஒரே சமயத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர்.

மிகச் சிறப்பாக விளையாடி வந்த பிரதீப் ஆண்டனி சில காரணங்களுக்காக ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது இதனை தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்ற வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பூகம்பம் டாஸ்க்கில் முழுமையாக பிக் பாஸ் போட்டியாளர்கள் முழுமையாக வெற்றி பெறாததால் ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறிய விஜய் வருமா மற்றும் அனன்யா இருவரும் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக தற்போது மீண்டும் உள்ளே நுழைந்து இருக்கின்றனர்.