பிக்பாஸ் வீட்டில் பால் கேட்ச் டாஸ்கின் அடிப்படையில் போட்டியாளர்கள் தங்களுக்குள் பேசி ரேங்க் கொடுத்துக்கொள்ளவேண்டும் என புது டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு அடுத்த சுற்றில் சிறப்பு சலுகை வழங்கப்படும் என பிக் பாஸ் அறிவித்தார். இதனால் வாங்குவதால் அனல் பறந்தது. நமக்கு எதற்கு வம்பு என பெண் போட்டியாளர்கள் பலரும் ஐந்திற்கு மேற்பட்ட இடத்தை எடுத்துக்கொண்டனர். 

ரியோ, சோம், ஆரி ஆகியோர் இடையே தான் முதல் இடத்திற்காக வாக்குவாதம் ஏற்பட்டது. ஆரியும் ரியோவும் மோசமாக சண்டை போட்டுக்கொண்டனர். அதன் பின் வாக்கெடுப்பின் அடிப்படையில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் ரியோ, ரம்யா, சோம் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்று சலுகை பெற தேர்வாகி உள்ளனர். 

வீட்டில் கார்டனில் வைக்கப்பட்டு இருக்கும் பைப் செட்டப்பில் இருந்து சைரன் அடிக்கும்போது பந்துகள் அனுப்பப்படும். அதை பிடித்தால் மதிப்பெண்அவர்களுக்கு வழங்கப்படும். இந்த டாஸ்கில் இதுவரை மூன்று பகுதிகள் முடிவடைந்து உள்ள நிலையில் இன்று நான்காவது பகுதி தொடங்கி உள்ளது. 

நேற்று நடந்த ரேங்கிங் டாஸ்கில் ரியோ, ரம்யா மற்றும் சோம் ஆகியோருக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இன்றைய நான்காவது பகுதியில் போட்டியாளர்களுக்கு தங்க நிற பந்துகள் அனுப்பப்பட்டன. அந்த பந்தை பிடிக்கும் போட்டியாளர்கள் அங்கு வைக்கப்பட்டு இருக்கும் போர்டில் இருக்கும் எதாவது ஒரு சக்திகளில் எடுத்து அதில் இருக்கும் விஷயத்தை செய்யலாம். 

பாலாஜி ஒரு கார்டை எடுத்து தன்னுடைய மதிப்பெண்களை 100 அதிகரித்து கொண்டார். அதன் பின் ரம்யா எடுத்த கார்டில் யாராவது ஒருவரது மதிப்பெண்களை பூஜ்யம் ஆக்க வேண்டும் என சொல்லப்பட்டது. அப்போது ரியோவின் மதிப்பெண்களை அவர் பூஜ்ஜியம் ஆக்கினார். அதன் பின் பாலாஜியின் மதிப்பெண்களை கேபி பூஜ்ஜியம் ஆக்கிவிட்டார். 

இதை கேபி மற்றும் ரியா இருவரும் கொண்டுகின்றனர். இதனால் கோபமான பாலாஜி, கேபி அடுத்து zero நீ தான் என கூறி சவால் விட்டிருக்கிறார். கேபி மற்றும் பாலாஜி இடையே இதனால் இன்று சண்டை நடந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் பாலாஜி கேபி இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.