நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டார். சனம் ஷெட்டிக்கு அதிக அளவு ஆதரவு வெளியில் இருந்த நிலையில் அவர் எப்படி எலிமினேட் ஆனார் என்கிற கேள்வி தான் பலரது மனதிலும் இருக்கிறது. எவிக்ஷன் முடிந்து அடுத்த டாஸ்க் வழங்கப்படுமா என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தலைவர் போட்டிக்கான தேர்வு நடந்தது. 

வழக்கமாக எப்போதும் மூன்று போட்டியாளர்கள் மட்டுமே கேப்டன்ஸி டாஸ்கில் போட்டியிடுவார்கள். ஆனால் இந்த முறை சற்று வித்தியாசமாக வீட்டில் இருக்கும் அனைத்து போட்டியாளர்களும் கலந்துகொள்ளாமல் என அறிவிக்கப்பட்டு உள்ளது. திரையில் சில புகைப்படங்கள் காட்டப்படும் என்றும் அதன் பின் அது பற்றி கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்பவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என பிக் பாஸ் கூறினார். இதில் அனைவரையும் வீழ்த்தி அனிதா வெற்றி பெற்று இருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சில போட்டியாளர்கள் மனதிலும் இந்த கேள்வி எழுந்து இருக்கிறது. வாயை கூட திறக்காமல் மௌனம் காக்கும் போட்டியாளர்கள் பலர் இருக்கும் நிலையில் போட்டியை சிறப்பாக விளையாடிய சனம் வெளியேற்றப்பட்டது ஏன் என விவாதமும் பிக் பாஸ் வீட்டில் தொடங்கி இருக்கிறது.

சனம் வெளியேற்றப்பட்டது பற்றி அனிதா, ஆரி உள்ளிட்டவர்கள் பேசி இருப்பது தற்போது வெளிவந்திருக்கும் இன்றைய இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு உள்ளது. ஒருத்தரை ஒருத்தர் காப்பாத்திக்கிட்டு விளையாடுகிறார்கள். அவங்க (அர்ச்சனா கேங்) எல்லாம் உள்ள இருக்காங்க. Individual ஆக விளையாடும் நபர்கள் வெளியே போயிட்டே இருக்காங்க' என ஆரி விரக்தியுடன் பேச 'என்ன இது கேம், எதற்கு விளையாடனும்' என அனிதாவும் அதை பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் நாமினேஷனில் இருக்கும் 7 பேரும் எதோ ஒரு இடத்தில் தனியாக விளையாடுபவர்கள் தான். Individual பிளேயர்கள் வெளியே போயிட்டே இருந்தார்கள் என்றால், அவர்கள் குரூப் ஸ்ட்ராங் ஆகிவிடும். இன்று சனம் வெளியே போய்ட்டாங்க என நான் சும்மா உட்கார்ந்து இருந்தால், நாளை எனக்கும் அதே நிலைமை தான் வரும்' என ஆரி பேசி இருக்கிறார்.