பிக்பாஸ் வீடு 60 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. தற்போது கால் சென்டர் டாஸ்க் முடிந்து ரேங்க்கிங் நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் நடக்கும் டாஸ்கில் சோம் சேகர் குமாரு என்ற வார்த்தையை எத்தனை மாடுலேஷனில் பேசலாம் என பேசி காட்டினார். அதில் அவர் பேசியது பற்றி சனம் ஷெட்டி கோபத்துடன் பேசினார். மேலும் அர்ச்சனா bossy குமாரு என கேபி கூறியதால் அவர் அதிக நேரம் கோபத்துடன் இருந்தார்.

கால் சென்டர் டாஸ்க் தொடர்ந்து நடந்த நிலையில் ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவானி பேசிக்கொண்டனர். ரம்யா சிரித்துக்கொண்டே soft hurt செய்வது பற்றி ஷிவானி கேட்டார். இறுதியில் ரம்யா கால் வைக்காத காரணத்தினால் ஷிவானி நாமினேட் ஆனார். அடுத்து அனிதா ரியோவிடம் போன் செய்து பேசினார் அனிதா. நீங்கள் இந்த பிக் பாஸ் டைட்டில் ஜெயிக்க என்ன quality இருக்கிறது என சொல்லுங்கள் என அனிதா கேட்டார். தான் gentleman ஆக இருக்கிறேன், நேர்மையாக இருக்கிறேன் என பதில் சொன்னார். ஆனால் அனிதா அதிக ஏற்றுக்கொள்ளவில்லை.

அதன் பின் குரூப்பிஸம் பற்றி பேச தொடங்கினர். உங்களிடம் நான் சண்டை போடும் போது மட்டும் எப்படி எனக்கு 8 நாமினேஷன் ஓட்டுகள் வந்தது என கேள்வி கேட்டார். நீங்கள் தனி ஆளாக தான் விளையாடுகிறீர்களா இல்லை யாரையாவது முன்னிலை படுத்தி விளையாடுகிறீர்களா என அனிதா கேட்ட நிலையில் அவர் நான் தனியாக தான் விளையாடுகிறேன் என சொன்னார். ஆனால் பார்ப்பதற்கு அப்படி தெரியவில்லை என்று அனிதா கருத்து கூறினார்.

கால் சென்டர் டாஸ்க்கில் சிறப்பாக பேசிய போட்டியாளர்கள் மற்றும் தங்கள் முழு முயற்சியையும் வெளிக்காட்டாமல் டாஸ்கை மேற்கொண்டவர்கள் என்ற அடிப்படையில் ஒன்றில் இருந்து 13 வரை வரிசைப்படுத்த வேண்டும் என்கிற டாஸ்க் வழங்கப்பட்டு உள்ளது. டாப் 6-ல் வரவேண்டும் என பாலா துடிக்கிறார். 

இதை பார்த்த ரமேஷ், உனக்கு என்ன மனஸ்தாபம் இருக்கோ..இதெல்லாம் சொல்லி நீ பேசிட்ட பாலா என்று போட்டுடைத்தார். ரமேஷ் கூறிய பின் தன்னை அடக்க முடியாமல் சிரிக்கிறார் பாலா. இதை பார்த்த ஆரி சற்று கோபத்துடன் பார்க்கிறார். இனி வரும் ப்ரோமோக்களில் சுவாரஸ்யம் கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.