பிக் பாஸ் நான்காவது சீசன் தற்போது 59 வது நாளை தொட்டிருக்கிறது. வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் இடையே அதிக பிரச்சனைகள் வருவதற்கு காரணம் குரூப்பிஸம் என்று தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்தது தான். அப்படி இருப்பதால் பிக் பாஸ் அளிக்கும் டாஸ்குகளில் பல போட்டியாளர்கள் தங்களது கேங்கில் இருக்கும் நபர்களுக்கு ஆதரவாக செயல்படுவது நடக்கிறது. இதனால் சுவாரஸ்யம் குறைவாகவே தெரிகிறது. 

கடந்த வாரம் தொடங்கி இந்த வாரமும் நடந்து வரும் கால் சென்டர் டாஸ்கிலும் குரூப்பிஸம் உள்ளது என குறை கூறி வருகின்றனர் பிக்பாஸ் விரும்பிகள். போட்டியாளர்கள் ஒரு சில குறிப்பிட்ட நபர்களை மட்டும் காப்பாற்ற வேண்டும் என்று போன் காலை கட் செய்ததை நாம் பார்த்தோம். இதனால் பிக் பாஸ் வீட்டில் குரூப்பிஸம் மற்றும் Favorism அங்கே இருக்கிறது என்கிற குற்றச்சாட்டு மேலும் அதிகரித்து இருக்கிறது.

இந்நிலையில் இந்த கால் சென்டர் டாஸ்கில் சிறப்பாக பேசிய போட்டியாளர்கள் மற்றும் தங்கள் முழு முயற்சியையும் வெளிக்காட்டாமல் இந்த் டாஸ்கை மேற்கொண்டவர்கள் என்ற அடிப்படையில் ஒன்றில் இருந்து 13 வரை வரிசைப்படுத்த வேண்டும் என்கிற டாஸ்க் வழங்கப்பட்டு உள்ளது. இன்றைய இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டு உள்ளது.

இந்த ரேங்க் வரிசையை அவர்களே பேசி முடிவெடுக்கவேண்டும் என்பதால் இந்த டாஸ்கில் அதிகம் வாக்குவாதம் மற்றும் பிரச்னையும் வர வாய்ப்பு அதிகம் உள்ளது. யாருக்கு முதலிடம், யாருக்கு கடைசி இடம் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதனால் பெருந்தன்மையாக போன் காலை கட் செய்த போட்டியாளர்களுக்கு பெரும் சிக்கல் எழுந்திருக்கிறது. சனம், கேபி, அர்ச்சனா ஆகியோரின் வாக்குவாதத்தை பார்த்த ரமேஷ், ஹவுஸ்மேட்ஸை கிண்டலடிக்கிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.