பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் தீபாவளி கொண்டாட்டம் என்பதால் அதிகம் கொண்டாட்டம் இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தனர் ரசிகர்கள். பெருந்தொற்று காலத்தில் வாழகிடைக்கும் ஒவ்வொரு நாளுமே கொண்டாட்டம் தான். அன்றாட வாழ்வை கொண்டாடுவோம், அன்பை தொற்ற வைப்போம். இனிக்க வேண்டிய இடத்தில் இனிப்போம், வெடிக்க வேண்டியதற்கு மட்டும் வெடிப்போம். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என குறிப்பிட்டிருந்தார். 

தன்னுடைய பாணியில் தீபாவளி வாழ்த்து கூறுய கமல் ஹவுஸ்மேட்ஸிடம் டாஸ்க் குறித்த கேள்விகளை எழுப்பினார். சுரேஷ் சக்ரவர்த்தியின் எவிக்ஷனுக்கு பிறகு பிக்பாஸ் வீட்டில் சண்டைகள் பெரிதாக இல்லை. அலெர்ட்டாக இருக்கின்றனர் ஹவுஸ்மேட்ஸ். மேலும் இன்றைய பிக் பாஸ் ஷோ பற்றி பேசிய அவர் இன்று வீட்டில் கொண்டாட்டமும் இருக்கு விவாதமும் இருக்கு என குறிப்பிட்டிருக்கிறார். 

ஹவுஸ்மெட்ஸ், போட்டியாளர்களுக்கு மேட்சான வெடிகளை கொடுத்து விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. இதில் ஜித்தன் ரமேஷ், அனிதாவுக்கு சரவெடியை கொடுக்கிறார். அதனை தொடர்ந்து ஊசி வெடியை எடுக்கும் ஆஜித், அதனை ஷிவானிக்கு கொடுப்பதாக கூறி அவரிடம் கொடுக்கிறார். அதனை ஷிவானி வாங்கி வைத்து கொள்கிறார் ஷிவானி. இதைப்பார்த்த கமல், என்னமோ கொடுத்துட்டாங்க என்பதை போல் வாங்கி வச்சுகிட்டாங்க என ஷிவானியை கலயாய்க்கிறார். அதனை தொடர்நது ஷிவானி ரியோவுக்கு அணுகுண்டு கொடுக்கிறார், இதனால் அதிர்ச்சியாகிறார் ரியோ.

இந்த வாரம் பாலாஜி முருகதாஸ் மிகவும் மோசமான செயல்களில் ஈடுபட்ட நிலையில் அவரை தான் கமல் குறிவைத்து பல கேள்விகள் எழுப்பி இருக்கிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாரும் சேர்ந்து போரிங் பெர்ஃபாமர் குறித்து கேட்கிறார் கமல். ரமேஷிடம் கேட்டபோது, பாலாவை கோர்த்து விட்டார். அதற்கு பதிலளித்த பாலாஜி முருகதாஸ், எனக்கு தந்த ஐந்து டாஸ்க்கில் நான்கு டாஸ்க்கில் வெற்றி பெற்றேன். என்னை எப்படி கூறலாம் என்று முறையிடுகிறார். 

ரமேஷ் கூறியது நியாயமாக உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். பாலா சரியாக ஒத்துழைக்க வில்லை என்று கமலிடம் எடுத்துரைக்கிறார் ரமேஷ். இதை மற்றவர்கள் ஒப்பு கொள்கிறீர்களா என்று கேட்கிறார் கமல். இந்த வாரம் எவிக்ஷன் இருக்குமா ? புதிதாக ஏதாவது என்ட்ரி உள்ளதாக என்று ஆவலாக உள்ளனர் பிக்பாஸ் ரசிகர்கள்.