விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த மாதம் 17-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில் பங்கேற்ற பிரபலங்கள் வெளியே வந்த பிறகு அடிக்கடி சந்தித்து வருகின்றனர். கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் குறிப்பிட்ட போட்டியாளர்களுக்குள் நல்ல பாண்டிங் உள்ளது. குறிப்பாக அன்பு கேங்கை சேர்ந்தவர்கள் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வருவதை காண முடிகிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் முன்பே, அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் தனியாக சந்தித்தனர். அதனை தொடர்ந்து அர்ச்சனா தலைமையில் அன்பு கேங்கை சேர்ந்தவர்கள் சோம சேகர் வீட்டிற்கு சென்றனர். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. 

இந்நிலையில் ஜீவா மற்றும் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள களத்தில் சந்திப்போம் படத்தின் பிரிவியூ ஷோவை அன்பு கேங்கினர் மற்றும் சில போட்டியாளர்கள் சேர்ந்து சென்று பார்த்துள்ளனர். ஜீவா மற்றும் அருள்நிதி நடித்துள்ள களத்தில் சந்திப்போம் திரைப்படம் ஜனவரி 28 ஆம் தேதி ரிலிஸ் ஆகும் என சொல்லப்பட்டது. ஆனால் மாஸ்டர் படத்தின் வெளியீட்டால் பிப்ரவரி 5 ஆம் தேதியான இன்று ரிலீஸாகியுள்ளது.

இது தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரியின் 90 ஆவது தயாரிப்பாகும். இந்நிலையில் படத்தின் ப்ரிவியூ ஷோவை நேற்று சோம சேகர், ஜித்தன் ரமேஷ், சுரேஷ் சக்கரவர்த்தி, ரியோ, அனிதா, அனிதாவின் கணவர் பிரபாகரன், ரேகா, கேபி, அர்ச்சனா உள்ளிட்டோர் சேர்ந்து பார்த்துள்ளனர். ஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றதை தொடர்ந்து, பிக்பாஸ் பிரபலங்களுக்காக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். 

அனிதா சம்பத் வெளியிட்ட புகைப்படத்தில் ஆரி மற்றும் சனம் ஷெட்டி இல்லை. இதை பார்த்த ரசிகர்கள் எங்கே என கேட்டு வருகின்றனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anitha Sampath (@official_anithasampath)