தனுஷின் துள்ளவதோ இளமை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஷெரின்.விசில் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக அவதரித்தார் ஷெரின்.அந்த படத்தில் இடம்பெற்ற அழகிய அசுரா பாடல் ஷெரினுக்காகவே மிகவும் பிரபலமாக இருந்ததது.இதற்கு பிறகு உற்சாகம்,நண்பேன்டா என்று சில படங்களில் மட்டுமே தோன்றினார் ஷெரின்.

கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் தொடரின் மூன்றாவது சீசனில் ஷெரின் கலந்துகொண்டார்.இந்த தொடரின் முக்கிய நபர்களில் ஒருவராக ஷெரின் திகழ்ந்தார்.இந்த தொடரின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார் ஷெரின்,தமிழக்தின் அனைத்து இடங்களுக்கும் ஷெரின் பிரபலமான ஒரு நபராக மாறினார்.இந்த தொடரில் இருந்து வெளியே வந்தபிறகும் இவரது இன்ஸ்டாகிராமில் இவர் போடும்  லைக்குகள் அள்ளும்.

கொரோனா காரணமாக பல பிரபலங்களும் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் ரசிகர்களுடன் கழித்து வருகின்றனர்.ஷெரின் ரசிகர்களுடன் டச்சில் இருக்க அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்தும் வந்தார்.பிக்பாஸ் தொடரிற்கு செல்லும்போது ஷெரின் நல்ல உடலெடையுடன் இருந்தார் ஆனால் இந்த தொடரில் இருந்து வெளியேவந்த போது ஷெரினின் ட்ரான்ஸ்பார்மஷனை கண்டு பலரும் ஆச்சரியத்தில் இருந்தனர்.

டிக்டாக்கிலும் தவறாமல் தினமும் வீடியோ போட்டுவிடுவார் ஷெரின்.இவரது டிக்டாக் வீடியோக்கள் ரசிகர்களிடம் ட்ரெண்ட் அடித்து விடும். இந்திய அரசு சீனா தயாரித்த 59 செயலிகளை தடை செய்து அறிவிப்பு வெளியிட்டது.இந்த செயலிகள் பயனாளர்களின் பெர்சனல் விஷயங்களை திருடுவதாக குற்றம் சாட்டி இந்த செயலிகளை தடை செய்தனர் இந்திய அரசாங்கம்.இதில் பயனர்கள் அதிகம் உள்ள டிக்டாக்,ஹலோ உள்ளிட்ட முக்கிய செயலிகள் இடம்பெற்றன.

டிக்டாக் பல பயனர்களின் தினசரி பொழுதுபோக்காக இருந்து வந்தது.இதனை தடை செய்தது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சில நாட்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் அச்சுஅசலாக டிக்டாக் அம்சங்களை கொண்ட ரீல்ஸ் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியது.இதனை தொடர்ந்து பலரும் தங்கள் வீடியோக்களை அதில் பதிவிட்டு வருகின்றனர்.இந்த வரிசையில் டிக்டாக்கில் மிகவும் ஆக்டிவ் ஆக இருந்த ஷெரினும் இணைந்துள்ளார்.தன்னுடைய டிக்டாக் வீடியோக்கள் சிலவற்றை பதிவிட்டு வந்தார்.

தற்போது சிவப்பு நிற புடவையில் தனது புதிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.பல ரசிகர்களும் இந்த வீடீயோவை ஷேர் செய்து வருகின்றனர்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்