பிரபல தமிழ் நடிகையான ரம்யா பாண்டியன் விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி ,கலக்கப்போவது யாரு மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். 
 
2016 ஆம் ஆண்டு  இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் வெளிவந்த ஜோக்கர் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவது என இருந்த ரம்யா பாண்டியன்  சில நாட்கள் முன்பு லேசர் கண் சிகிச்சை செய்துள்ளார்.இதனால் ரம்யா பாண்டியனின் ரசிகர்கள் தொடர்ந்து  சமூக வலைதளங்கள் ரம்யா பாண்டியனின்  உடல்நிலை குறித்து தொடர்ந்து விசாரித்துள்ளனர். 

இந்நிலையில் ரம்யா பாண்டியனின் சகோதரியும் ஆடை வடிவமைப்பாளருமான சுந்தரி திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்-" இன்ஸ்டாகிராம் குடும்பத்தில் அனைவருக்கும் வணக்கம்,  ரம்யா லேசர் கண் சிகிச்சை செய்துள்ளார். இன்னும் அதிகபட்சம்  இரண்டு நாட்களில்  திரும்பிவிடுவார்.  நீங்கள் யாரும் வருத்தப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். அவள் நலமுடன் இருக்கிறாள். உங்களின் அளவுகடந்த அன்புக்கு நன்றி"  என பகிர்ந்துள்ளார். 

எனவே ரம்யா  பாண்டியன் மீண்டும் சமூக வலைத்தளங்களில் இயல்பு நிலைக்கு திரும்ப ஓரிரு நாட்கள் ஆகலாம்.அதன்பிறகு  தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திரைப்பட படப்பிடிப்புகளில்  கலந்து கொள்ள உள்ளார்.  

கடைசியாக ரம்யா பாண்டியன் சமுத்திரகனி உடன் இணைந்து 2018ஆம் ஆண்டு மறைந்த இயக்குனர் தாமிராவின் இயக்கத்தின் ஆண் தேவதை என்னும் படத்தில் நடித்திருந்தார்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் தாமிரா கொரோனா தொற்றால்  உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் சீசன் 4 ஆகியவற்றில் பங்கு பெற்றதன் மூலம்  தமிழ்நாட்டின் வீடுகள் எங்கும் ரசிகர்களை உருவாக்கியிருக்கிறார் ரம்யா பாண்டியன்.  பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின் முதல் முறையாக ஒரு புதிய திரைப்படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் ரம்யா பாண்டியன். 

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க புதுமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.  பிரபல நடிகை வாணி போஜன் உடன் இணைந்து ரம்யா பாண்டியன் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளார். மக்களின் மனம் கவர்ந்த பாடகர் கிரிஷ் இந்த திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் மைனா,கும்கி, மான்கராத்தே திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் சுகுமார் இந்த திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்கிறார்.

பிக்பாஸிற்குப் பிறகு  ரம்யா பாண்டியன் நடிக்கும் முதல் திரைப்படம் ரம்யா பாண்டியனின் திரை  பயணத்தில் முக்கியமான திரைபடமாக இருக்கும் என்பதால் இது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.