கடந்த 2018-ல் வெளியாகி பாலிவுட்டில் பட்டையை கிளப்பிய படம் அந்தாதூண்.வித்தியாசமான திரைக்கதைக்காக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான படமாக இருந்தது இந்த படம்.இந்த படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.தியாகராஜன் இந்த படத்தை தமிழில் தயாரிக்கிறார்.அந்தகன் என்று இந்த படத்திற்கு பெயரிட்டுள்ளனர்.

டாப் ஸ்டார் பிரஷாந்த் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.படத்தினை யார் இயக்குவது என்று பெரிய குழப்பம் முதலில் நிலவி வந்தது , கடைசியாக பொன்மகள் வந்தாள் திரைப்படத்தினை இயக்கிய ஜே.ஜே.பெட்ரிக் இயக்குகிறார்.இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் சரியாக தெரியவில்லை.

நவரச நாயகன் கார்த்திக்,சிம்ரன்,சமுத்திரக்கனி,ப்ரியா ஆனந்த்,யோகி பாபு,மனோபாலா,கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்னை பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது.

50% மேல் படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.இந்த படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வந்தன.இந்த படத்தில் தற்போது முக்கிய வேடத்தில் நடிகையும்,பிக்பாஸ் மூலம் பிரபலமான வனிதா விஜயகுமார் நடிக்கிறார் என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.