தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமாக இருக்கும் விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி அதிக ரசிகர்களால் பார்க்கப்படும் ரியாலிட்டி ஷோவாக திகழ்கிறது. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 4 சீசன்கள் நடைபெற்றுள்ளது.

கடைசியாக நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 4-ல் ஆஜித் ,ஆரி அர்ஜுனா அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ்,  கேப்ரியலா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், ரியோ ராஜ்,சனம்ஷெட்டி, ஷிவானி நாராயணன், சிவம் சேகர் சம்யுக்தா கார்த்திக் சுரேஷ் சக்கரவர்த்தி வேல்முருகன் ரேகா அர்ச்சனா மற்றும் சுசித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் பிரபல தமிழ் நடிகர் ஆரி அர்ஜுனா மக்களின் பேராதரவோடு முதல் பரிசை தட்டிச் சென்றார். 
 
இந்நிகழ்ச்சியில் பலரது ஃபேவரட் பெண் போட்டியாளராக வலம்வந்த ஷிவானி நாராயணன் விஜய் தொலைக்காட்சியின் பகல் நிலவு எனும் தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி நாராயணனை கிட்டத்தட்ட 29 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது ஏரியல் யோகா செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஷிவானி நாராயணன். ஃபிட்டாக இருப்பதற்காக பல பிரபலங்களும் பல விதமான உடற்பயிற்சிகளை செய்து வரும் சூழலில் நடிகை ஷிவானி நாராயணன் ஏரியல் யோகா செய்து அசத்தும் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.