தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும், ஸ்டைலிஷ் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் அல்லு அர்ஜுனின் இளைய சகோதரரும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் பிரபல இளம் நடிகருமான அல்லு சிரிஷ் கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது காயமடைந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ராதா மோகன், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக்கிய திரைப்படம் கௌரவம். கௌரவம் திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் அல்லு சிரிஷ். முன்னதாக பாலிவுட்டில் வெளியான ப்ரட்டிபந்த் மற்றும் தமிழில் வெளியான மாயாபஜார் ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து கொத்தா ஜன்டா, ஸ்ரிரஸ்டு சுபமஸ்டு, 1971- பியான்ட் பார்டர்ஸ்,  ஒக்க க்ஷனம்,ABCD நடித்த திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக நடிகர் அல்லு சிரிஷ், நடிகை அனு இமானுவேல் உடன் இணைந்து பிரேம கடன்டா எனும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரொமாண்டிக் காதல் திரைப்படமாக உருவாகும் இத் திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் தற்போது நடிகர் அல்லு சிரிஷ் உடற்பயிற்சியின் போது காயமடைந்த தகவல் வெளியாகி உள்ளது. கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது கழுத்தில் காயம் அடைந்து வலிக்கு போடப்படும் கழுத்துப்பட்டையை அணிந்திருக்கும் புகைப்படத்தை அல்லு சிரிஷ் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

popular young actor allu sirish neck injured due to strength training