தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் கடைசியாக வெளிவந்த யுத்தம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக இயக்குனர் தக்ஷிணாமூர்த்தி ராமர் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடிகர் சிலம்பரசன்.T.R உடன் இணைந்து கௌதம் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் பத்து தல படத்தின் படப்பிடிப்பும் தற்போது முழு வீச்சில் நடைப்பெற்று வருகிறது.

இந்த வரிசையில் அடுத்ததாக கௌதம் கார்த்திக் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் 1947 ஆகஸ்ட் 16. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் ஏ.ஆர்.முருகதாஸ் புரோடக்சன்ஸ், PURPLE BULL என்டர்டைன்மென்ட் மற்றும் GOD BLESS என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் N.S.பொன்குமார் எழுதி இயக்கியுள்ளார்.

ரேவதி ஷர்மா கதாநாயகியாக நடிக்கும் 1947 ஆகஸ்ட் 16 திரைப்படத்தில் விஜய் டிவி புகழ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். செல்வகுமார்.S.K ஒளிப்பதிவு செய்யும் 1947 ஆகஸ்ட் 16 திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்நிலையில் 1947 ஆகஸ்ட் 16 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. பலரது கவனத்தை ஈர்த்துள்ள 1947 ஆகஸ்ட் 16 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…