"அன்னையர் தினத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் தாயாரை கௌரவித்த தமிழ்நாடு ஆளுநர்!"- விவரம் உள்ளே

ஐஸ்வர்யா ராஜேஷின் தாயாருக்கு தமிழ்நாடு ஆளுநர் விருது,aishwarya rajesh mother honoured by tamil nadu governor | Galatta

தென்னிந்திய சினிமாவின் சிறந்த நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் தாயாருக்கு தமிழ்நாடு ஆளுநர் சிறப்பு விருது அளித்து கௌரவித்துள்ளார். குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக தொடர்ந்து தரமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்த நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் தி கிரேட் இந்தியன் கிச்சன், ரன் பேபி ரன், சொப்பன சுந்தரி ஆகிய திரைப்படங்கள் வரிசையாக வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்த வரிசையில் கடந்த வெள்ளிக்கிழமை மே 12ஆம் தேதி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஃபர்ஹானா திரைப்படமும் ரிலீஸ் ஆனது. ஒரு நாள் கூத்து மற்றும் மான்ஸ்டர் ஆகிய திரைப்படங்களின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி தற்போது ரிலீசாகி இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபர்ஹானா திரைப்படம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அடுத்ததாக முதல் முறை ஹிந்தி சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மாணிக் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். தொடர்ந்து மலையாளத்தில் டொவினோ தாமஸ் உடன் இணைந்து அஜயன்டே ரண்டாம் மோஷனம் படத்தில் நடிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து, பார்வதி, ஊர்வசி, ரம்யா நம்பீசன், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோருடன் இணைந்து HER எனும் திரைப்படத்திலும் நடிக்கிறார். மேலும் நடிகர் ஜோஜு ஜார்ஜ் உடன் இணைந்து புலிமடா எனும் திரைப்படத்திலும் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரைக்கும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின்இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் பக்கா ஆக்சன் த்ரில்லர் படமாக தயாரான துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நீண்ட காலமாக ரிலீசுக்கு காத்திருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் இந்த 2023ம் ஆண்டில் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்துள்ள மோகன்தாஸ், ஆக்சன் கிங் அர்ஜுனன் உடன் இணைந்து நடித்துள்ள தீயவர் குலைகள் நடுங்க, உள்ளிட்ட திரைப்படங்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர தயாராகி இருக்கின்றன.

இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் தாயார் நாகமணி அவர்களுக்கு அன்னையர் தினமான இன்று (மே14) தமிழ் நாடு ஆளுநர் அவர்கள் சிறப்பு விருது கொடுத்துள்ளார். ஆரம்ப கட்டத்தில் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக களமிறங்கி பின்னர் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்து, தனது கடின உழைப்பால் தற்போது தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகையாக உயர்ந்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் இந்த சாதனை பயணத்திற்கு உறுதுணையாக இருந்த அவரது தாயாரை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது தாயார் விருதுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது Twitter பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷின்  தாயார் விருதுடன் இருக்கும் அந்த புகைப்படம் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் பதிவு இதோ…
 

As a daughter, this will be a moment that I will cherish for life! This memento, which was presented to my mother #Nagamani as a recognition of her sacrifice and her contribution in bringing out my excellence in acting, by none other than the honourable Tamil Nadu Governor RN… pic.twitter.com/6lVSNenAUF

— aishwarya rajesh (@aishu_dil) May 14, 2023

சூர்யாவின் மிரட்டலான ஆக்ஷன் ட்ரீட்டாக தயாராகும் கங்குவா... கொடைக்கானல் படப்பிடிப்பு குறித்து வெளிவந்த செம்ம மாஸ் அப்டேட் இதோ!
சினிமா

சூர்யாவின் மிரட்டலான ஆக்ஷன் ட்ரீட்டாக தயாராகும் கங்குவா... கொடைக்கானல் படப்பிடிப்பு குறித்து வெளிவந்த செம்ம மாஸ் அப்டேட் இதோ!

துல்கர் சல்மானின் அதிரடியான PAN INDIA கேங்ஸ்டர் படம்... பாடல்கள் குறித்து வெளிவந்த அட்டகாசமான அறிவிப்பு இதோ!
சினிமா

துல்கர் சல்மானின் அதிரடியான PAN INDIA கேங்ஸ்டர் படம்... பாடல்கள் குறித்து வெளிவந்த அட்டகாசமான அறிவிப்பு இதோ!

'சூர்யா சார் அடக்கமான மனிதர், அசாதாரணமான கடின உழைப்பாளி!'- கங்குவா பட பிரபலம் புகழாரம்! வைரலாகும் SHOOTING SPOT புகைப்படம் இதோ
சினிமா

'சூர்யா சார் அடக்கமான மனிதர், அசாதாரணமான கடின உழைப்பாளி!'- கங்குவா பட பிரபலம் புகழாரம்! வைரலாகும் SHOOTING SPOT புகைப்படம் இதோ