விஷ்ணு விஷால் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ‘லால் சலாம்’ இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. வைரல் பதிவு உள்ளே..

விஷ்ணு விஷால் பிறந்தநாளில் லால் சலாம் படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ் - Vishnu vishal birthday gift from aishwarya rajinikanth viral post here | Galatta

தென்னிந்திய திரையுலகில் குறிப்பிடப்படும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஷ்னு விஷால். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2009ல் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல சிறப்பு கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன்படி அவரது நடிப்பில் வெளியான குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, இன்று நேற்று நாளை, ஜீவா, ராட்சசன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமானது.  தொடர் வெற்றி படங்களையடுத்து நடிகர் விஷ்னு விஷால் தமிழ் சினிமாவின் குறிப்பிடதக்க நடிகர்களில் ஒருவராய் வளர்ந்தார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான, 'FIR' , 'கட்டா குஸ்தா' ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டது. அதை தொடர்ந்து நடிகர் விஷ்னு விஷால் தற்போது 'மோகன் தாஸ்', 'ஆர்யன்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று விஷ்னு விஷால் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் இதனிடையே இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் 'லால் சலாம்' படத்தில் நாயகனாக நடித்து வரும் நடிகர் விஷ்னு விஷாலுக்கு படக்குழுவினர் கேக் வெட்டி வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "18 மணி நேரம் தொடர்ச்சியாக படப்படிப்பு நடந்த பின்னர் இரண்டு கேக்குகள் நாங்கள் வாங்கினோம். ஒன்று விஷ்ணு விஷாலின் பிறந்த நாளை கொண்டாட இன்னொன்று லால் சலாம் படத்தின் இரண்டாவது ஷெட்யூல் முடிந்தததற்காக.. நள்ளிரவு 2 மணிக்கு இந்த இரண்டு விழாவையும் நாங்கள் கொண்டாடினோம். எங்கள் பர்த்டே பேபி விஷ்ணு விஷாலுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அதே சமயம் இரண்டு மணிக்கு வரை விழித்திருந்து எங்களுக்கு ஒத்துழைப்பை கொடுத்த அனைவருக்கும் எனது நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்‌. இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryarajini)

லைகா தயாரிப்பில் கிரிக்கெட் கதைகளத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் விஷ்னு விஷால், விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் சிறப்பு கௌரவ தோற்றத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். மேலும் படத்தில் ஜீவிதா, தம்பி ராமையா, செந்தில் உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும் படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஜெய் பீம் கூட்டணியில் உருவாகும் 'சத்யதேவ் சட்ட அகாடமி'.. – நடிகர் சூர்யாவை பாராட்டிய முதல்வர் முக ஸ்டாலின்.! விவரம் உள்ளே..
சினிமா

ஜெய் பீம் கூட்டணியில் உருவாகும் 'சத்யதேவ் சட்ட அகாடமி'.. – நடிகர் சூர்யாவை பாராட்டிய முதல்வர் முக ஸ்டாலின்.! விவரம் உள்ளே..

“His name is John” இனி ஸ்டைலிஷ் சியான் விக்ரம்.. துருவ நட்சத்திரம் படத்தின் 2nd single குறித்து வெளியான  புரோமோ அப்டேட்..!
சினிமா

“His name is John” இனி ஸ்டைலிஷ் சியான் விக்ரம்.. துருவ நட்சத்திரம் படத்தின் 2nd single குறித்து வெளியான புரோமோ அப்டேட்..!

“ஒருவர் படித்தால் அந்த தலைமுறையே நன்றாக இருக்கும்” கல்வியின் முக்கியத்துவம் குறித்து நடிகர் கார்த்தி – முழு வீடியோ உள்ளே..
சினிமா

“ஒருவர் படித்தால் அந்த தலைமுறையே நன்றாக இருக்கும்” கல்வியின் முக்கியத்துவம் குறித்து நடிகர் கார்த்தி – முழு வீடியோ உள்ளே..