யானை படத்தின் அசத்தலான சிங்கிள் ஷாட் பார் சண்டை காட்சி !
By Aravind Selvam | Galatta | July 07, 2022 11:16 AM IST
தமிழ் சினிமாவில் தனது விடாமுயற்சியால் தடம் பதித்தவர் அருண் விஜய்.இவர் ஹீரோவாக நடித்த யானை படம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து அருண்விஜய் சினம்,பாக்ஸர்,அக்னி சிறகுகள்,பார்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
யானை படத்தினை ஹரி இயக்கியுள்ளார்.Drumsticks Productions இந்த படத்தை தயாரித்துள்ளனர்.அருண் விஜய் படங்களில் அதிக பட்ஜெட் கொண்டஇந்த படம் உருவாகியுள்ளது.இந்த படத்தின் ஹீரோயினாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்.
யோகி பாபு,குக் வித் கோமாளி புகழ்,அம்மு அபிராமி,சமுத்திரக்கனி,கே ஜி எப் புகழ் கருடா ராம்,ராதிகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்த படம் ஜூலை 1ஆம் தேதி இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இந்த படத்தின் சிங்கிள் ஷாட் பார் சண்டை காட்சி ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.செம மாஸான இந்த சண்டைக்காட்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Watch the riveting single shot fight scene from Yaanai - do not miss this!!
06/07/2022 08:57 PM
Arun Vijay's Yaanai - NEW Power-Packed MASS Trailer is here! Watch it here!
29/06/2022 07:15 PM